• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்

April 7, 2026 தண்டோரா குழு

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில் பொதுமக்களுக்கான கார்டியோ–டயபிட்டிஸ் (இதயம்–நீரிழிவு) சிறப்பு சுகாதார முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான “Together for Health. Stand with Science” என்ற கருப்பொருளின் அடிப்படையில், அறிவியல் சார்ந்த சுகாதார விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில், 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள கார்டியோ–டயபிட்டிஸ் மாஸ்டர் ஹெல்த் சேக்கப் தொகுப்பு வெறும் ரூ.1,000க்கு வழங்கப்படுகிறது. இதில் முழுமையான இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், இமேஜிங் சேவைகள், எக்கோ உள்ளிட்ட மேம்பட்ட இதய பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

சமீப காலங்களில் திடீர் இதய மரணங்கள் அதிகரித்து வருவதுடன், அவை நீரிழிவு நோய் மற்றும் இதய தொடர்பான பிரச்சினைகளுடன் இணைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக 25–60 வயதுக்குட்பட்டவர்களில் இந்த அபாயம் அதிகமாக இருப்பதால், அவர்களை முன்னெச்சரிக்கை பரிசோதனைகளுக்கு ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்ததாவது,

“மக்கள் தங்களின் உடல்நிலையை முன்கூட்டியே பரிசோதித்து பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்காகவே குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை வழங்குகிறோம்” என்றார்.

இந்த சிறப்பு முகாம் ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் முதல் 50 பேருக்கு மட்டும் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய: 9944333006 / 8489655556 / 9659455556.

மேலும் படிக்க