• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா: 2328 மாணவியருக்கு பட்டம் !

March 27, 2026 தண்டோரா குழு

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் 37 வது
பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.விழாவில் முதன்மை விருந்தினராக ஐஐடி சென்னையின் இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றி, சிறந்து விளங்கிய மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார்.

இந்நிறுவனத்தின் வேந்தரும், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான மீனாட்சிசுந்தரம் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார்.விழாவில் துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் கலந்து கொண்டு விழாவிற்கான வரவேற்புரையாற்றி 2025-2026 கல்வி ஆண்டின் அறிக்கையை வாசித்தார்.

விழாவில் காமகோடி தமது உரையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விக்சித் பாரத் 2047 ஆண்டின் வளர்ச்சி மாணவர்களுக்கான வளர்ச்சியாக பல்வேறு செயல் திட்டங்களை தேசத்தின் வளர்ச்சி நோக்கி எடுத்துரைத்திருக்கிறார். மாணவர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று இந்தியநாடு எதிர்காலத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் ,மருத்துவம் ஆகியவற்றின் வழியாக மேம்பாடடைய வேண்டும்.

மாணவர்கள்+2 முடித்தவுடன் உயர்கல்விக்கு கற்க வருகிற எண்ணிக்கை இன்றைக்கும் குறைவாகவே இருக்கிறது.நூற்றுக்கு 71 பேர் உயர் கல்வி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது.எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்களாகிய உங்களுக்கு நாட்டுப்பற்று இருக்க வேண்டும். இன்றைக்கு போர் நடக்கிறது உலகெங்கும் எரிபொருள்,எரிசக்தி ஆற்றல் தட்டுப்பாடுஆகியவை நிலவுகிறது.எனவே நம்முடைய நாட்டிலேயே அனைத்தையும் பெறுகிற தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பதிவாளர் ஹை.இந்து, சிறப்பு விருந்தினர்கள்,நிறுவனத்தின் முக்கியத் தலைவர்கள்,நிர்வாகக்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்,நிர்வாக அதிகாரிகள்,புல முதன்மையர்கள்,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,பட்டம் பெறும் மாணவியர், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

37-வது பட்டமளிப்பு விழாவில்,
1682 இளங்கலைப்பட்டதாரிகள், 1 பட்டயதாரர், 532 முதுகலைப்பட்டதாரிகள், 6 முதுகலை பட்டயதாரிகள்,107 முனைவர் பட்டதாரிகள் (Ph.D.) என 2328 பட்டதாரிகளுக்குப் பல்வேறு துறைகளில் பட்டங்களும் 94 பேர் பதக்கங்களும் பட்டங்களும் வழங்கப்பட்டு மாணவியரின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.

மேலும் படிக்க