• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிக வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியான கோவில்பாளையத்தில் ‘ஜி ஸ்கொயர் லாவெண்டர் திட்டம் அறிமுகம்

March 20, 2026 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய பிளாட்டெட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம், கோயம்புத்தூரில் மிக வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியான கோவில்பாளையத்தில் ‘ஜி ஸ்கொயர் லாவெண்டர் எனும் பிரீமியம் வில்லா மனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜி ஸ்கொயர் லாவெண்டர்திட்டம், அறிமுகம் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் மற்றும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில் ,

“மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணங்களால், கோயம்புத்தூரின் மிகவும் நம்பிக்கைக்குரிய குடியிருப்புப் பகுதியாக கோவில்பாளையம் உருவெடுத்து வருகிறது.இதற்கு அருகிலேயே அமைந்துள்ள ‘ஜி ஸ்கொயர் நீலவானம்’ திட்டம் வெறும் 60 நாட்களில் முழுமையாக விற்பனையான நிலையில், இந்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பான மற்றும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்ட வில்லா மனைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய ‘ஜி ஸ்கொயர் லாவெண்டர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள ‘ஜி ஸ்கொயர் லாவெண்டர்’ திட்டம், கோவில்பாளையத்திலிருந்து கோவை மாநகரின் இதர பகுதிகளை இணைக்கும் வகையில் அன்றாடப் பயணிகளுக்குச் சிறந்த போக்குவரத்து வசதியை வழங்குகிறது. இது கோவை வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி (1.5 கி.மீ), கேஎம்சிஎச் மருத்துவமனை கோவில்பாளையம் (1 கி.மீ), கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய ஐடி மையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும், கோயம்புத்தூரின் ஐடி காரிடார்கள் மற்றும் பூங்காக்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் அமைந்துள்ளதால், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நவீன நகர்ப்புற வாழ்க்கையை விரும்பும் குடும்பங்களுக்கும் இத்திட்டம் ஒரு மிகச் சிறந்த தேர்வாகும்.

9.18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘ஜி ஸ்கொயர் லாவெண்டர் திட்டத்தில், வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் 168 பிரீமியம் மனைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அறிமுக சலுகையாக, முதலில் மேற்கொள்ளப்படும் 50 முன்பதிவுகளுக்கு மட்டும் ஒரு சென்ட் ரூ.9.9 லட்சம் முதல் வழங்கப்படுகிறது. கோவில்பாளையம் வீட்டுமனை சந்தையில் உள்ள மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஜி ஸ்கொயர் லாவெண்டர் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வழங்கப்படுவதால் தனித்துவமிக்க திட்டமாக அறிமுகமாகிறது.

தற்போதைய சந்தை விலையை விடக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, முதல் நாளிலிருந்தே 50% வரை உடனடி மதிப்பு உயர்வும் நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தரும் முதலீட்டு வாய்ப்பாகவும் இது திகழ்கிறது.

மேலும் படிக்க