February 24, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி கைக்கடிகார பிராண்டான சொனாட்டா இன்றைய இளம் தலைமுறையினரின் துடிப்புமிக்க வேகம், லட்சியம் மற்றும் விடாமுயற்சியைப் போற்றும் வகையில் தனது புதிய பிராண்ட் பிரச்சாரமான ’வாட்ச் அவுட் ஃபார் அஸ்’ -ஐ அறிமுகப்படுத்தியது.
டைட்டன் நிறுவனத்தின் அனலாக் வாட்ச் பிரிவின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரியான ரஞ்சனி கிருஷ்ணசுவாமி கூறுகையில்,
“கடந்த ஓராண்டாக, சொனாட்டா தனது பிராண்டை இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துள்ளது .ஒருவருடைய அடையாளம் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதில் இல்லை, மாறாக அவர் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி எவ்வளவு தூரம் செல்ல விரும்புகிறார் என்பதிலேயே உள்ளது. இதை காட்சிப்படுத்தும் வகையில் சொனாட்டாவின் இந்தப் புதிய ’வாட்ச் அவுட் ஃபார் அஸ்’ பிராண்ட் பிரச்சார திரைப்படப் படம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் எதையும் தாங்கும் மனப்பக்குவத்துடன் தங்களை மாற்றிக்கொள்பவர்கள், முன்னேறுவதற்கான அணையாத தாகம் கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை, ‘ஸ்டைல்’ என்பது உலகை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தின் வெளிப்பாடாகும். உழைப்பால் உந்தப்பட்டு, தங்களுக்கான பாதையைத் தாங்களே உருவாக்கும் சாதனையாளர்களை சொனாட்டா கௌரவிக்கிறது. எதற்கும் அஞ்சாமல், வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், தங்களுக்குத் தேவையான வெற்றியைத் தாங்களே செதுக்கும் இளைய தலைமுறையினரின் மனநிலையை சொனாட்டா இதன் மூலம் பிரதிபலிக்கிறது.
மேலும், இளம் இந்தியாவின் வேகத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ள சொனாட்டா பிராண்டின் அடுத்த அத்தியாயமாக ‘’வாட்ச் அவுட் ஃபார் அஸ்’ அமைகிறது. வெறும் கைதட்டல்களால் அல்லாமல், தனிப்பட்ட மைல்கற்களால் முன்னேற்றத்தை அளவிடும் ஒரு தலைமுறையை பிரதிபலிக்கிறது. கடிகாரம் நம் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் ஒரு உற்ற தோழனாக மாறுகிறது, நம்முடைய முடிவுகள் மற்றும் மாற்றங்களுக்கான தருணங்களில் கைக்கடிகாரம் நம்முடைய துணையாக உள்ளது.
அது சொனாட்டாவின் கைக்கடிகாரங்களாக இருக்கும் போது உங்களுடைய ஆளுமை இன்னும் தனித்துவமிக்கதாகும்.நியாயமான விலையில் நவீன ஃபேஷனை முன்னெடுக்கும் பிராண்டான எங்களின் முக்கிய உத்தியானது, இன்றைய காலத்திற்கு ஏற்ற அம்சங்களுடன்னான வடிவமைப்பு, மக்கள் எளிதில் வாங்கும் வாய்ப்புகள் மற்றும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தயாரிப்புகள் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, சொனாட்டாவை ஒரு நம்பகமான மற்றும் நவீன தேர்வாக முன்னிறுத்துவதே எங்கள் இலக்கு.” என்றார்.