• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் “FETAL ECHOCON 2026 –இருநாள் தேசிய அறிவியல் மாநாடு தொடக்கம்

February 9, 2026 தண்டோரா குழு

பீளமேடு, கோயம்புத்தூரில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில், கருவில் இதய நோய்கள் மற்றும் முன்கால இதய ஸ்கேனிங் தொடர்பான இருநாள் தேசிய அறிவியல் மாநாடான FETAL ECHOCON 2026 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது.

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு 4 TNMC கிரெடிட் பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது.இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து கருவில் மருத்துவ நிபுணர்கள், குழந்தை இதய மருத்தவர்கள், மரபணு நிபுணர்கள், நியோநேட்டாலஜிஸ்ட்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வில்,
டாக்டர் லலிதா N,பேராசிரியர் மற்றும் மூத்த ஆலோசகர் – கருவில் மருத்துவம், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, மாநாட்டின் அறிமுக உரையை வழங்கினார்.
டாக்டர் J. S.புவனேஸ்வரன், இயக்குநர் – பி.எஸ்.ஜி.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும்டாக்டர் T. M. சுப்பராவ், முதல்வர் – பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

விருதுகள்:

Prof. சுரேஷ் சேஷாத்ரி – Lifetime Achievement Award

டாக்டர் இந்திராணி சுரேஷ் – Pioneer in Fetal Echocardiography Award

ISUOG அமைப்பின் தலைவர் ப்ரொஃ. ரீம் அபு ரஸ்டம் (USA),“Every Little Heart Matters” திட்டம் குறித்த சிறப்பு அழைப்புப் பேருரையை வழங்கினார்.

இந்த மாநாட்டில், 3D / 4D / STIC இமேஜிங், முதல் மூன்று மாத கருவில் இதய குறைபாடுகள், கருவில் அரித்மியா,
மரபணு காரணிகள், In-utero cardiac therapy போன்ற தலைப்புகளில் கேஸ் அடிப்படையிலான கலந்துரையாடல்கள் மற்றும் hands-on பயிற்சிகள் இடம்பெறுகின்றன.

மாதர் மற்றும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடர்ந்து முன்னோடியாக செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க