February 7, 2026
தண்டோரா குழு
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஓம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான க்ரோமா இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ’காதலர் தினச் சிறப்பு விற்பனையை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
காதலர் தினத்தில் உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் இந்த சிறப்பு விற்பனையில், பல்வேறு பிரிவுகளிலான தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ரூ.699 முதல் தொடங்கும் பொருட்களில் உங்களுக்குப் பிடித்ததைப் பரிசாக வழங்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்தக் காதலர் தினச் சலுகைகள் பிப்ரவரி 6 முதல் 15 வரை அனைத்து க்ரோமா விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் மற்றும் எளிய தவணை முறை போன்ற வசதிகளின் மூலம் கூடுதல் பயன்களைப் பெற முடியும், வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை.கூடுதலாக, ‘எச்.டி.எஃப்.சி டாடா நியூ கடன் அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு 10% வரை தள்ளுபடி பெறலாம்.க்ரோமாவின் ‘ஹீரோ ஆஃபர்ஸ்’ மூலம் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் ஆடியோ தயாரிப்புகள் மற்றும் இதர தயாரிப்புகளில் பெரும் சேமிப்பைப் பெற முடியும்:ஐபோன் 17 தற்போது ரூ.47,742 என்ற விலையில் கிடைக்கிறது.
இந்தச் சலுகையைப் பெறும் முறை:உங்கள் பழைய ஸ்மார்ட்போனை அதன் தற்போதைய நிலை மற்றும் மாடலுக்கு ஏற்ப ரூ. 23,500 வரை எக்ஸ்சேஞ்ச் செய்யலாம்.பழைய போனை கொடுப்பதன் மூலம், கூடுதலாக ரூ. 8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகப் பெறலாம்.வங்கிச் சலுகையாக ரூ.2,000 நேரடி கேஷ்பேக் பெறலாம்.மார்ஷல் புளூடூத் ஸ்பீக்கர் சந்தை விலையான ரூ 19,999-க்கு பதிலாக ரூ.12,999-க்குக் கிடைக்கிறது. சோனி ஹெட்போன்கள் ரூ.14,990 விலையுள்ள இவை 50% தள்ளுபடியில் ரூ. 7,499-க்குக் கிடைக்கின்றன.
ஸ்மார்ட்போன் பிரிவில், ரெட்மி நோட் 15G க்கு 22% தள்ளுபடியும், ஒன்பிளஸ் நார்ட் சிஇ5 க்கு 14% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது; அதே நேரத்தில் ஆப்பிள் ஐபேட் 11-வது தலைமுறை 12% தள்ளுபடியுடன் ரூ.30,766 விலையில் கிடைக்கிறது.நம் உடலில் அணியக்கூடிய பயன்பாட்டு சாதனங்களான வியரபிள்ஸ் தயாரிப்புகளைப் பொறுத்தவரை, போட் வேவ் அஸ்ட்ரா நியோ மற்றும் நாய்ஸ் கலர்ஃபிட் விக்டர் போன்ற பிரபலமான ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளுக்கு 80% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் எஸ்இ 3 ரூ.25,900 முதல் தொடங்குகிறது; இதனை ஒன்பது மாத வட்டியில்லா தவணை முறையில் மாதம் ரூ 2,791 தவணை செலுத்துவதன் மூலம் வாங்கலாம்.தனிநபர் பராமரிப்புப் பிரிவிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன; பிலிப்ஸ் மல்டி-க்ரூமிங் கிட் மற்றும் ஸ்ட்ரெய்ட்டனிங் ப்ரஷ்ஷஸ் க்கு தள்ளுபடி 30% வரையிலும், டைசன் ஏர் ராப் சாதனத்திற்கு 10% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரோமா தனது சுய-பராமரிப்பு சாதனங்களுக்கு 65% வரை தள்ளுபடி வழங்குகிறது; ஹேவல்ஸ் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் கர்லர் 45% அதிரடித் தள்ளுபடியில் கிடைக்கிறது.மேலும், வாடிக்கையாளர்கள் க்ரோமா விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய பிரத்தியேகக் கூட்டுச் சலுகைகள் மற்றும் இலவசப் பரிசுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.