• Download mobile app
09 Jul 2026, ThursdayEdition - 3802
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெ.ச் மருத்துவக்கல்லூரிக்கு “சிறந்த ஆராய்ச்சி மற்றும் புதுமை” க்கான விருது

February 6, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் உள்ள முன்னணி மருத்துவ நிறுவனமான கேஎம்சிஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (KMCH IHSR), 2026-ஆம் ஆண்டிற்கான AHPI குளோபல் கான்க்லேவ் (AHPI Global Conclave) மாநாட்டில், “சிறந்த ஆராய்ச்சி மற்றும் புதுமை” (Excellence in Research & Innovation) விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா,கடந்த ஜனவரி 23, 2026 அன்று மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் நடைபெற்றது இந்த விழாவில் கேஎம்சிஹெச் குழுமம் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது.சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகக்கான விருதை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (KMCH–IHSR) வென்றது.

சிறந்த மருத்துவச் செயல்பாடுகள் மற்றும் சிறந்த அவசரக்கால சிகிச்சை இந்த இரு விருதுகளையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை வென்றது.இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கத்தின் (AHPI) இயக்குநர் ஜெனரல் டாக்டர் கிர்தர் கியானி இந்த விருதை வழங்கினார்.இதனை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி கல்வி திட்டத்திற்கான டீன் டாக்டர் எம்.ஜி.ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

மருத்துவ அறிவியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நிறுவனங்களை AHPI அமைப்பு ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது. கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி செய்த சிறந்த மருத்துவ ஆராய்ச்சிகள்,புதிய சிகிச்சை முறைகள் மற்றும் மாணவர்களிடையே ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி மற்றும் சாமானிய மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட KMCH IHSR கல்வி நிறுவனம், அதிநவனீ உள்கட்டமைப்பு வசதிகளையும், அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்களையும் கொண்டுள்ளது.

தீவிரமான பயிற்சி மற்றும் புதுமையான ஆராய்ச்சி வாய்ப்புகள் மூலம் அடுத்த தலைமுறை மருத்துவர்களை உருவாக்கும் சிறந்த மருத்துவக் கல்வி மையமாக விளங்குகிறது.

இந்தச் சாதனை குறித்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்,

இந்த அங்கீகாரம் எங்களது மருத்துவ முன்னேற்றத்திற்கு கிடைத்த சான்று.இது நிறுவனத்திற்கான விருது மட்டுமல்ல, நோயாளிகளுக்கு சிறந்த தீர்வுகளைக் காண உழைக்கும் எங்களது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எனத் தெரிவித்தார்.

கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிகக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,நவனீ மருத்துவத்திற்கு ஆராய்ச்சியே முதுகெலும்பு என்றும், இச்சாதனை தங்களை இன்னும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க