• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கோடா கைலாக் 50,000 கார்கள் விற்பனை செய்து மைல்கல்லை கொண்டாடி ஓராண்டு சாதனை பதிவு செய்தது

February 5, 2026 தண்டோரா குழு

2025-ஆம் ஆண்டில் தனது மிகச்சிறந்த விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்தும், புதிய குஷாக் காரை அறிமுகப்படுத்தியும் வெற்றிநடை போடும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தற்போது தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

இந்தியச் சாலைகளில் ஐரோப்பியத் தொழில்நுட்பத்தை அனைவரும் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே இந்த பிராண்டின் உத்தியாகும்.அதன் ஒரு பகுதியாக, தனது அதிகம் விற்பனையாகும் காரான கைலாக் மாடலில் கூடுதல் வேரியண்ட்களை இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகள் மற்றும் சிறந்த மதிப்பினை வழங்குகிறது.

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ -வின் வளர்ச்சிப் பயணத்தில் கைலாக் ஒரு வலுவான தூணாக உருவெடுத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 50,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி, இந்த பிராண்ட் இந்தியாவில் கால்பதித்த 25-வது ஆண்டில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா வின் மிகச்சிறந்த விற்பனை சாதனைக்கு கைலாக் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

பாதுகாப்பு,டிரைவிங் டைனமிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் சிறந்த மதிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இது சப்-4எம் எஸ்யூவி பிரிவில் கைலாக் -ஐ ஒரு முக்கியமான போட்டியாளராக நிலைநிறுத்தியுள்ளது.

கைலாக் -இன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,

“இந்தியாவிற்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்புக்கு கைலாக் ஒரு சிறந்த சான்றாகும்;சந்தையின் மிகவும் சவாலான ஒரு பிரிவில் நாங்கள் கால்பதிக்க இது வழிவகுத்தது, 50,000 விற்பனை மைல்கல்லைக் கடந்தது உண்மையிலேயே நெகிழ்ச்சியளிக்கிறது மற்றும் ஸ்கோடா பிராண்ட் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்த வேகத்தைத் தொடரும் வகையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட கூடுதல் மாடல்களுடன் கைலாக் வரிசையை நாங்கள் விரிவுபடுத்துகிறோம்.

அதே வேளையில், தனது பிரிவிலேயே உண்மையானஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட, மிக எளிதாக வாங்கக்கூடிய வாகனமாக கைலாக் -ஐ மாற்றுகிறோம். இந்த மேம்பாடுகள், இன்றைய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் பரவலாகக் கிடைப்பதையும் உறுதி செய்கின்றன. இன்னும் விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட மாடல்களுடனும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள கூடுதல் சுவாரஸ்யமான அறிமுகங்களுடனும், இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற ஐரோப்பியத் தொழில்நுட்பம், சிறந்த மதிப்பு மற்றும் சிறப்பான டிரைவிங் அனுபவம் கொண்ட கார்களை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பை கைலாக் q தொடர்ந்து பிரதிபலிக்கிறது.” என்றார்.

நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஏழு விலை நிலைகளைக் கொண்டிருந்த கைலாக் வரிசை, 2026-இல் ஆறு வேரியண்ட்கள் மற்றும் 11 விலை நிலைகளாக விரிவடைகிறது. கைலாக் -இன் குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு, ரூ.50,000 வரை பலன்களை அளிக்கும் வரையறுக்கப்பட்ட காலத்திற்கான ஆண்டுவிழா சலுகைகளை இந்த பிராண்ட் அறிவித்துள்ளது. மேலும், கைலாக் மாடலுக்கான ஓராண்டு ஸ்கோடா பராமரிப்பு பேக்கேஜில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக, எந்த வேரியண்ட்டில் கைலாக் காரை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கட்டாயப் பரிசு உண்டு. இந்தச் சலுகைகள் 2026 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கிடைக்கும்.

மேலும் படிக்க