• Download mobile app
21 May 2026, ThursdayEdition - 3753
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவனை குறி வைத்து மோசடியில் சிக்க வைத்த மோசடி கும்பல் தவிக்கும் பெற்றோர்

February 2, 2026 தண்டோரா குழு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் இவர் கடந்த 25 வருடமாக திருப்பூரில் பனியன் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய வீட்டு அருகாமையில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மருமகன் முத்துக்காமன் இவர்களுக்கு இடையே 15 வருடங்களுக்கு மேலாக நல்ல உறவுமுறை இருந்து வந்திருக்கிறது இதனை பயன்படுத்திக் கொண்ட முத்து காமன் முருகன் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து முருகனின் இளைய மகன் ஸ்ரீ சக்தி இவர் கல்லூரி மாணவர் இவருடைய வங்கி கணக்கை பயன்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் தனக்கு தங்க நகை மீட்க பணம் ஒரு நாள் வட்டிக்கு கடனாக பணம் தாருங்கள் நான் நகையை மீட்டு உடனடியாக அதிக பணத்திற்கு வைத்து தங்கள் பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறி கல்லூரி மாணவனின் வங்கி கணக்கில் கோவையை சேர்ந்த கணேஷ் குமார் அவர்களிடம் 12 லட்சம் பெருமாநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 7 லட்சம் திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவரிடம் ஒன்பது லட்சம் இது போன்ற பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.

மாணவன் ஸ்ரீ சக்தியின் வங்கி கணக்கை வைத்து மட்டும் சுமார் 28 லட்சம் மோசடி செய்திருக்கிறார்.முத்துக்காமன்,தற்போது இந்த பணம் மாணவன் ஸ்ரீ சக்தியின் அக்கவுண்டில் இருந்து ஒரு டிரேடிங் அக்கவுண்ட் இருக்கு மாற்றி அனைவரின் பணத்தையும் மோசடி செய்து இருக்கிறார் முத்துக்காமன் பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவன் மீது மோசடி புகார் கொடுத்து வரும் சூழ்நிலையில் மாணவனின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பல்வேறு காவல் நிலையங்களில் காலை முதல் மாலை வரை மோசடி செய்த முத்து காமனையும் அழைக்காமல் உரிய விசாரணையும் நடத்தாமல் பெற்றோரையும் மாணவனையும் அமர வைத்து காவல்துறையினரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கூறுகின்றனர் மேலும் தொடர்ந்து காவல் நிலையத்தில் அலைக்கழிப்பு செய்வதால் மாணவனும் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் இன்று 02 பிப்ரவரி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களை பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் நேரில் அணுகி சம்பந்தப்பட்ட புகார் குறித்து மனு அளித்திருக்கிறார்கள்.

மனுவில், திருப்பூர் அல்லது கோவையில் ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் நேர்மையான வெளிப்படையான விசாரணை நடக்கும் பட்சத்தில் தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தரப்பில் எந்த ஒரு தவறும் இல்லை எங்கள் தரப்பு நியாயத்தை விளக்க தயாராக இருப்பதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களிடம் உறுதி அளித்து புகார் மனுவை அளித்திருக்கிறார்கள்.

இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர் உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதாக வாக்குறுதி அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கூறினார்கள்.
உதவி என்று கேட்டு வந்தவருக்கு உதவி செய்ய போக அதுவே உபத்திரமாக மாறுவது இந்த சம்பவம் உணர்த்துகிறது.

ஒருவரின் பின்புலம் தெரியாமல் வங்கிக் கணக்கை தருவது மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்பது இந்த வழக்கின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க