January 22, 2026
தண்டோரா குழு
இன்றைய நாட்களில் இரவில் நேரம் கழித்து உறங்குவதாலும், அதிக மன அழுத்தத்தின் காரணமாகவும், ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உட்கொள்ளுவதாலும் நல்ல ஆரோக்கிய நிலையில் காணப்படும் கேசமும், சருமமும் நகங்களும் கூட பொலிவிழந்து போகக்கூடும். உடலின் உள்ளிருந்தே அழகைப் பேணும் தீர்வுகளை நுகர்வோர் அதிக அளவில் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் உதவும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா,நியூட்ரிலைட் பயோட்டின் சி பிளஸை (ஸிங்கும் பீட்டா கரோட்டினும் அடங்கியது) அறிமுகப்படுத்துகிறது.
ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் சோப்ரா இந்த அறிமுகத்தைக் குறித்து கூறும்போது,
இது அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்ட ஓர் ஊட்டச்சத்து மருந்தாகும். ஆரோக்கியமான கேசத்தையும், சருமத்தையும், நகங்களையும் உடலின் உள்ளிருந்தே பேண உதவும் மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. இது ‘பயோட்டினை மட்டும்’ கொண்ட ஒரு செய்முறை அல்ல. இந்த சப்ளிமெண்டில் இருப்பது ஒரே மூலப்பொருளும் அல்ல. இதில் பயோட்டின், வைட்டமின் சி, துத்தநாகம் ஆகியவை மட்டுமல்லாமல் பீட்டா கரோட்டினும் அடங்கியுள்ளது.
இன்றியமையாத பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துக்களின் 100% ஐ வழங்கும் இந்த தயாரிப்பு அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்திலும் தாவர அடிப்படையிலான ஆரோக்கியத்திலும் ஆம்வே வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. நியூட்ரிலைட்டின் 90 ஆண்டுகளுக்கும் மேலான ஊட்டச்சத்து நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு, பரிந்துரைக்கப்படும் தினசரி ஊட்டச்சத்து அளவுக்கு இணங்க இன்றியமையாத ஊட்டச்சத்துக்களை ஒன்றிணைத்து, அன்றாட ஊட்டச்சத்தின் மீது ஆம்வே கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றியமையாத ஊட்டச்சத்துக்களின் ஒட்டுமொத்தக் கலவையை நியூட்ரிலைட் பயோட்டின் சி பிளஸ் (ஸிங்கும் பீட்டா கரோட்டினும் அடங்கியது) கொண்டுவருகிறது. பயோட்டின் கேச வளர்ச்சிக்கும், ஃபாலிக்கிள் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. ஸிங்க் நகங்களை வலுப்படுத்தி அவற்றின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. அதே வேளையில் சரும ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவி ஆன்டிஆக்சிடண்ட் அழுத்தத்திற்கு எதிராக செல்களுக்கு ஆன்டிஆக்சிடண்ட் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்தச் செய்முறையை மேம்படுத்துவதன் மூலம் இயற்கையின் வளமான தாவர மூலங்களில் ஒன்றான ஆல்காவில் இருந்து பெறப்பட்ட பீட்டா கரோட்டின், யூவி வெளிப்பாட்டின் தாக்கத்தைக் குறைக்க உதவுவதன் மூலம் சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திற்கு எதிரான இயற்கையின் கேடயமாக செயல்படுகிறது, அதே நேரத்தில் யூவி -யால் தூண்டப்படும் தோல் சிவத்தலுக்கு எதிராக ஒளி பாதுகாப்பை வழங்குகிறது).18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுதுடையவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள நியூட்ரிலைட் பயோட்டின் சி பிளஸின் (ஸிங்கும், பீட்டா கரோட்டீனும் அடங்கியது) ஒரு மாத்திரையை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஒரு சீரான உணவுமுறை ஆகியவற்றின் ஒரு பகுதியாக தினமும் உட்கொள்ள வேண்டும்.
இந்தத் தயாரிப்பு ஓர் ஊட்டச்சத்துப் மருந்தாகும், இது மருத்துவப் பயன்பாட்டிற்கானது அல்ல. மேலும் இதை ஒரு மாறுபட்ட உணவிற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படக்கூடாது.