• Download mobile app
21 Jan 2026, WednesdayEdition - 3633
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

PSG IMSR & மருத்துவமனையில் நவீன கேத் லேப் திறப்பு

January 21, 2026 தண்டோரா குழு

PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PSG IMSR) மற்றும் மருத்துவமனையின் இதய நோயியல் துறை சார்பில்,மருத்துவமனை A பிளாக் (அடித்தளம்) பகுதியில் அமைந்துள்ள நவீன இதயக் கத்தீட்டரைக்சேஷன் ஆய்வகம் (Advanced Cath Lab) இன்று திறக்கப்பட்டது.

இந்த கேத் லேப்பை PSG & Sons’ Charities நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன்,மருத்துவ மேற்பார்வையாளர் வருண், PSG IMSR முதல்வர் சுப்பராவ்,நிர்வாக பொது மேலாளர் ஜகன்னாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதய நோயியல் துறை தலைவர் டாக்டர் தமிழரசு,மூத்த ஆலோசகர் டாக்டர் ராமசாமி, தடுப்பு இதய நோயியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜேந்திரன், மூத்த நிர்வாகிகள்,இதய நோயியல் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புதிய கேத் லேப்பில் அதிநவீன இமேஜிங் மற்றும் அஞ்ஜியோகிராபி கருவிகள், மேம்பட்ட இன்டர்வேன்ஷனல் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால், சிக்கலான இதய நோய்களை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
இந்த திறப்பு மூலம் PSG மருத்துவமனையின் இன்டர்வேன்ஷனல் கார்டியாலஜி வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதனுடன், ALLIA GEIGS-520 மற்றும் ALLIA GEIGS-320 தொழில்நுட்பத்துடன் கூடிய மேலும் இரண்டு கேத் லேப்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக PSG மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.புதிய வசதி மூலம் விரைவான மற்றும் பாதுகாப்பான இதய சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், நோயாளிகளின் சிகிச்சை முடிவுகள் மேம்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது,பிராந்தியத்தில் உயர்தர மற்றும் எளிதில் அணுகக்கூடிய இதய சிகிச்சை வழங்கும் PSG மருத்துவமனையின் உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.இந்த திறப்பு, தமிழகத்தில் முழுமையான இதய சிகிச்சை மையமாக PSG IMSR & மருத்துவமனையின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க