January 10, 2026
தண்டோரா குழு
வேகமாக மாறிவரும் நிதித் துறையில், காப்பீட்டு ஆலோசகர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் பலர் இதை ஒரு முழுநேரத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன்னணியில் உள்ள டாடா ஏஐஏ, தனது ‘டாடா ஏஐஏ ஆரா’ தளம் மூலம் ஆலோசகர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கு வழிகாட்டுவதோடு, இந்த மாற்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் 31.5 லட்சத்திற்கும் அதிகமான ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள் குடும்பங்களின் நிதியைப் பாதுகாக்க உதவுகின்றனர். இருப்பினும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுள் காப்பீட்டின் பங்கு வெறும் 3.7 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்தத் துறையில் உள்ள பெரும் வாய்ப்பை உணர்ந்து, அடுத்த தலைமுறை ஆலோசகர்களை மேம்படுத்துவதை ‘டாடா ஏஐஏ ஆரா’ நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆயுள் காப்பீட்டின் பலன்கள் குறித்து தெரியாத பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு” என்ற நாட்டின் இலக்கை அடைய இது உதவி வருகிறது.
டாடா ஏஐஏ விநியோகப் பிரிவுத் தலைவர் அமித் தவே இதுகுறித்து கூறுகையில்,
“நாங்கள், எங்கள் ஆலோசகர்களை உண்மையான தொழில்முனைவோராகவே பார்க்கிறோம்.அவர்கள் வெறும் காப்பீட்டை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை; மாறாக உறவுகளை வளர்த்து, எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை வளர்க்கவும், வாடிக்கையாளர் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களைப் பாதுகாக்கும் எங்கள் லட்சியத்துடன் இணையவும் தேவையான வழிகாட்டுதல்களை ‘டாடா ஏஐஏ ஆரா’ வழங்குகிறது,” என்று தெரிவித்தார்.
ஒரு காலத்தில் பகுதி நேர வேலையாகக் கருதப்பட்ட காப்பீட்டு ஆலோசனை, இன்று அதிக வாய்ப்புள்ள ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசகர்கள் வெறும் இடைத்தரகர்கள் அல்ல; அவர்கள் தங்கள் நேரம், உறவுகள் மற்றும் வளர்ச்சியை நிர்வகிக்கும் தொழில்முனைவோர் ஆவர். நவீன தொழில்நுட்பங்கள், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த டிஜிட்டல் தளம் ஆகியவற்றின் உதவியுடன், ஆலோசகர்கள் தங்கள் தொழிலை விரைவாக விரிவுபடுத்தி, நாட்டின் நிதிப் பாதுகாப்புக்குப் பங்களிப்பதுடன் தங்கள் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும். 0% ஜிஎஸ்டி ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு 0% ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது,தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ‘மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள்’ உறுப்பினர்களின் எண்ணிக்கையில் டாடா ஏஐஏ இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
டாடா ஏஐஏ-வின் ஆதரவு மற்றும் ‘டாடா ஏஐஏ ஆரா’-வின் வழிகாட்டுதலுடன், ஆர்வமுள்ள ஆலோசகர்கள் அவர்களுக்கான ஒரு தொழிலை உருவாக்க முடியும். இது வெறும் வேலை மட்டுமல்ல; மற்றவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழில்முனைவோர் பயணமாகும்.