• Download mobile app
02 Jan 2026, FridayEdition - 3614
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஈதோஸ் (Ethos) செயற்கை நுண்ணறிவு (AI) இணைந்த கதிர்வீச்சு சிகிச்சை (ART) கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அறிமுகம்

January 2, 2026 தண்டோரா குழு

உலகின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் நம் நாட்டு மக்களுக்கும் எளிதில் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து பல புதுமையான மருத்துவ தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது.

அந்த வகையில் தற்போது இந்தியாவின் மிகவும் மேம்பட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஈதோஸ் என்ற கதிர்வீச்சு தொழில்நுட்ப வசதியை தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.

அது மட்டுமல்லாமல், சிம்பியா புரோஸ்பெக்டா என்ற அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. புற்றுநோய் மருத்துவத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த கருவிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூபாய் 70 கோடியாகும்.

இவற்றின் துவக்கவிழா ஜனவரி 2, 2026 அன்று கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெற்றது. கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி அவர்கள் இப் புதிய மருத்துவ தொழில்நுட்ப கருவிகளைத் துவக்கி வைத்தார்.

ஈதோஸ் கருவியானது புற்றுநோயாளியின் நிகழ்நேர உடல்நிலை மாறுபாட்டுக்கேற்ப பிரத்யேகமான சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழுவிற்கு உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சிகிச்சையின் துல்லியம் அதிகரிக்கிறது. இந்த சிகிச்சைக்கான நேரம் குறிப்பிடத்தக்க அளவு குறைவு என்பதால் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க முடிகிறது. புரோஸ்டேட், மூளைக்கட்டி, தலை மற்றும் கழுத்து, தொராசிக் முதலான புற்றுநோய் வகைகளுக்கு சிறந்த பலன்களை அளிக்கிறது.

துவக்கவிழாவில் உரையாற்றிய கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்றும் அதற்காக புதிய தொழில்நுட்பங்களில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“நிகழ்நேரத்தில் நோயாளியின் மாறுபடும் உடல் நிலைக்கேற்ப சிகிச்சை அளிக்கும் திறன் இதன் சிறப்பம்சம் ஆகும். புற்றுநோய் சிகிச்சையில் ஈதோஸ் ஒரு மைல்கல்லான மருத்துவ தொழில்நுட்பம்” என்று கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அவர்களும் கதிர்வீச்சு புற்றுநோய் துறை தலைவர், டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க