• Download mobile app
28 Dec 2025, SundayEdition - 3609
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம்

December 28, 2025 தண்டோரா குழு

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 2026-27 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜே.ஆர். அரங்கில் நடைபெற்றது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஹென்றி மற்றும் தேசிய ஆலோசனை குழு தலைவர் நேரு நகர் நந்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எட்டாவது நிர்வாக தேர்வாக நடைபெற்ற இதில்,தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் தலைமை தாங்கினார்.

தேசிய இணை செயலாளர் கண்ணன் என்கிற பாலசண்முகம் மற்றும் தேசிய துணை செயலாளர் பாலசுப்ரமணி, ஆலோசனை குழு உறுப்பினர் நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஃபெயிரா கூட்டமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை தேசிய செயல் செயலாளர் செந்தி்ல் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் ,ஃபெயிரா கூட்டமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து புதிதாக இணைந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பேசினார்.
இதில், ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வரும் தொழில் துறையினருக்கு ஃபெயிரா எப்போதும் உடன் இருக்கும் என உறுதி தெரிவித்தார்.

தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கையேடு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக அந்தோணி சாமி,பொது செயலாளர் மெடிக்கல் நாராயணன்,மாவட்ட செயல் செயலாளர் ஜெகந்நாதன் ,செயலாளர் மாவட்ட வளர்ச்சி சண்முகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியை ஃபெயிரா கூட்டமைப்பின் ஆர்க்கிடெக்ட் மற்றும் பொறியாளர் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் பொறியாளர் தேஜஸ்வினி தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் சுரேஷ்குமார்,மாநில செயற்குழு தலைவர் ராமநாதன், கோவை மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கனலி என்கிற சுப்பு செந்தில் குமார் உட்பட தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க