• Download mobile app
27 Dec 2025, SaturdayEdition - 3608
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

PSG & Sons Charities வழங்கும் “காதம்பரி 2026′ இசை விழா ஜன 2ம் தேதி துவக்கம் !

December 27, 2025 தண்டோரா குழு

PSG & Sons Charities நிறுவனம், தனது 100 ஆண்டு தொண்டு சேவையை கொண்டாடும் வகையில், “காதம்பரி-2026” என்ற நான்கு நாள் இசை விழாவை 02:01 2026 முதல் 05.01.2026 வரை PSG IMS&R அரங்கத்தில் நடத்துகிறது.

இந்த இசை விழா,இந்தியாவின் செமமையான கர்நாடக இசை,லைட் கிளாசிக்கல் மற்றும் நடனக் கலை மரபுகளை கொண்டாடுவதோடு, PSG கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் புகழ்பெற்ற கலைஞர்களும் பங்கேற்கும் சிறப்பான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது அனைத்து நாட்களிலும் நிகழ்ச்சிகள் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் முன்பதிவு மூலம் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, PSG கல்வி நிறுவன மாணவர்களின் “தர்ம ஸ்வரங்கள்” லைட் மியூசிக் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது அதனைத் தொடர்ந்து, சிறந்த மாணவர் கலைஞர்களுக்கு “கலை சுடர் விருது” வழங்கப்படும்.

03.01.2026 (சனிக்கிழமை) அன்று, PSG மாணவர்களின் “தசாவதார தர்மம்” என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், “யுவ கலாரத்னா விருது வழங்கும் விழாவும் நடைபெறும். பின்னர் ஸ்ரீமதி எஸ் ஐஸ்வர்யா மற்றும் குமாரி எஸ். சந்தியா அவர்களின் “மதுர சங்கீதம்” கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும்.

04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி கர்நாடக இசைத் துறையினரின் “தர்ம மார்கம்” இசை நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து பத்ம ஸ்ரீ & பத்ம பூஷண் விருதுபெற்ற ஸ்ரீமதி சுதா ரகுநாதநான் சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும்.

05.01.2026 (திங்கட்கிழமை) அன்று. PSG பள்ளி மாணவர்களின் “உள்ளம் உருகுதையா” கர்நாடக இசை நிகழ்ச்சியும், பின்னர் பிரபல பாடகர் சத்ய பிரகாஷ் D அவர்களின் “தர்மம் தலைக்காக்கும்” லைட் கிளாசிக்கல் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

“காதம்பரி-2026″இசை விழா மூலம், PSG & Sons’ Charities தனது கலை, கல்வி மற்றும் பண்பாட்டு சேவைகளின் நூற்றாண்டு பயணத்தை மக்களுடன் பகிர்கிறது.

இலவச அனுமதி சீட்டுகளுக்கு OR கோடை ஸ்கேன் செய்யலாம் அல்லது தொடர்பு எண்கள்: 98947 59934 / 87540 22880/ 98947 59940

மேலும் படிக்க