• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில் ஒரு பிரத்யேக தங்கும் விடுதித் திட்டம் நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில் அறிமுகம்!

December 21, 2025 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வழங்கிவரும் நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா – தண்ணீர்பந்தல் சாலை அருகே ‘அத்வயா’ என்ற பெயரில் முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில் ஒரு பிரத்யேக தங்கும் விடுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் குத்தகை அடிப்படையில் (Lease-based) செயல்படும் முதல் சீனியர் லிவிங் கம்யூனிட்டி இதுவாகும்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று இந்த வளாகத்தில் நடைபெற்றது. நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இயக்குனர் அஸ்வின் மற்றும் நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் வித்யா
செய்தியாளர்களை சந்தித்தனர்.

55 வயதுக்கு மேல் உள்ள நபர்கள், தங்களின் குடும்பத்திர் வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகளுக்கு செல்லும்போது முதியவர்களின் உடல், மனம் மற்றும் அமைதி என அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஒரு நவீன தங்கும் விடுதியில் மிகவும் சௌகரியமாக, நிம்மதியுடன் தங்கலாம் என கூறினர்.

அத்வயா- வில் தங்கும் முதியவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்காமல், அதே சமயம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 48 ஒற்றை படுக்கையறை ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகளும், 3 இரண்டு படுக்கையறை குடியிருப்புகளும் உள்ளன.இவற்றில் வழுக்காத தரைத்தளம், பிடிமான கம்பிகள், அகலமான கதவுகள் மற்றும் அவசர அழைப்பு வசதிகள்,24 மணிநேர மின்சாரம் மற்றும் சக்கர நாற்காலி (Wheelchair) எளிதாகச் செல்லும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முதியோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரபல பி.எஸ்.ஜி (PSG) மருத்துவமனை மற்றும் சேது ஆயுர்வேத மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வளாகத்தில் 24 மணிநேர செவிலியர் கண்காணிப்பு மற்றும் அழைப்பின் பேரில் மருத்துவர் வசதி கிடைக்கும். சுவையான மற்றும் ஆரோக்கியமான சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

வீட்டு வேலைகளைப் பற்றிய கவலை இல்லாமல், முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கதியானம் செய்ய தனி அரங்கு மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படும். நூலகம், உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பசுமையான பூங்காக்கள் உள்ளன.
உறவினர்கள் வந்தால் அவர்கள் தங்கத் தனி விருந்தினர் இல்லமும் உண்டு.

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாகவோ அல்லது கணவன்-மனைவியாக இருவரும் இணைந்து தங்கலாம்.குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்குத் தங்கலாம்.
முன்பதிவு செய்ய 96003 59222 அல்லது 98423 23071 என்ற எண்களை அழைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க