December 16, 2025
தண்டோரா குழு
ஆம்வே இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஆம்வே கார்ப்பரேட் மாரத்தான் போட்டியின் 3வது நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வு ஆரோக்கியமானதும் அதிக அளவில் விழிப்புணர்வுள்ளதுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் ஆம்வேக்கு இருக்கும் அர்ப்பணிப்பை பலப்படுத்தும் ஓர் ஆற்றல்மிக்கத் தளமாக அமைந்தது. உற்சாகமான ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாரத்தான, மக்கள் சிறந்த வகையில் வாழ உதவுவது என்ற நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தியது.
இந்த நிகழ்வைக் குறித்துப் பேசிய ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் சோப்ரா,
“ஆம்வே கார்ப்பரேட் மாரத்தானின் வெற்றி என்பது மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பதை ஊக்குவிக்கும் எளிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் நடத்தை மாற்றத்தை உண்டாக்கும் எங்கள் அர்ப்பணிப்புக்கு சாட்சியாக அமைகிறது. இந்த ஆண்டு பெற்ற உற்சாகமான பங்கேற்பும் நிபுணர்களின் வழிகாட்டுதலும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது சீரான, அன்றாடப் பழக்கவழக்கங்களில் இருந்து தொடங்குகிறது என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
மக்கள் சமுதாயங்கள் ஆரோக்கியமாக வாழும் காலகட்டத்தை மேம்படுத்தி நீண்ட, வலிமையான, மிகுந்த நிறைவான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.” என்று கூறினார்.”முழுமையான நல்வாழ்வு என்ற முக்கியக் கருத்துருவை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி 3 கிமீ, 5 கிமீ என்று இரு ஓட்டப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வு நிலையானதும் ஆரோக்கியமானதுமான நடத்தைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
ஓர் அனுபவம் வாய்ந்த சுகாதார நிபுணரின் நுண்ணறிவுமிக்க முதன்மை உரையுடன் இந்த மாரத்தான் தொடங்கியது. அவர் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுவதற்கான நடைமுறை உத்திகளைப் பகிர்ந்து கொண்டார்.பல உள்ளூர் நிறுவனங்களையும் அமைப்புகளையும் முதலிலேயே சந்தித்து இத்ன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதன் பலனாக இந்த நிகழ்வில் சுமார் 300 பேர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
ஆம்வே கார்ப்பரேட் மராத்தானின் 3வது நிகழ்வு அதிக அளவில் சமுதாய ஆதரவைப் பெற்றது. கார்ப்பரேட் அணிகள், உள்ளூர் கல்வி நிறுவனங்கள், அர்ப்பணிப்புள்ள அப்பல்லோ தன்னார்வலர்கள், திண்டுக்கல் கல்லூரியின் மாணவர்கள் ஆகியோரை இந்நிகழ்வு ஈர்த்தது.