• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி – கோவை மண்டல சுற்றில் 1200 மாணவர்கள் பங்கேற்பு!

December 15, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை கொண்டு பிற மாணவர்களுடன் ஆரோக்கியமாக போட்டியிடும் வாய்ப்பை இந்த போட்டி வழங்குகிறது.

7வது முறையாக நடைபெறும் இந்த போட்டியின் ஒரு பிரிவாக கோவை மண்டலத்தில் உள்ள மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடக்கிறது. இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கத்தில் கோவை மண்டலச் சுற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெரிய மேடையில் பெரிய தன்னம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்க இந்தத் தளம் உதவுவதாக லீட் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள ‘லீட்’ நிறுவனத்தின் சேவைகளில் சிறப்பாக இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

நர்சரி முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் பலருக்கு, ஒரு நேரடி பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் சிந்தனையை முன்வைப்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது, பேசுவது மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இதுவே முதல் மேடை அனுபவமாக இருந்தது என்பது ஒரு சிறப்பு.

லீட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் சுமீத் மேத்தா கூறுகையில் :-

“இன்றைய பள்ளி கல்வியில் நாம் காணும் மிகப் பெரிய குறைபாடு திறனில் அல்ல, தன்னம்பிக்கையில்தான் உள்ளது. பல மாணவர்கள் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டாலும், தங்கள் சிந்தனையை வெளிப்படுத்த, பேச, அல்லது ஒரு பெரிய மேடையில் செயல்பட வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் இவ்வளவு நாட்கள் கற்றுக்கொண்டதை ஒரு மேடையில் தன்னம்பிக்கை உடன் சோதனை செய்ய, நிஜ உலக அனுபவத்தை பெற தேசிய அளவில் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே இப்போட்டிகள் உருவாக்கப்பட்டது,” என்று கூறினார்.

போட்டிகளின் வகைகள்

தேசிய சாம்பியன்ஷிப்ஸ் 2025-இல் நடந்த போட்டிகளின் வகைகள்:

குட்டி சாம்பியன்கள்- நர்சரி முதல் 2-ஆம் வகுப்பு: இளம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் ஆரம்பகாலப் பேசும் திறன்களை வளர்த்தது.

‘கணித வல்லுநர்கள் & ஆங்கில வினாடி வினா வல்லுநர்கள்: வகுப்புகள் 3-9 வரையிலான மாணவர்களுக்கு எண்கணிதத் திறன், எழுத்துப்பிழை, இலக்கணம் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றை வலுப்படுத்தியது.

சொல்லின் செல்வர்கள் : மாணவர்களை தங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்கவும், கருத்துக்களைத் தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்தவும் உதவியது.

கோடிங் வல்லுநர்கள்: திட்ட அடிப்படையிலான சவால்கள் மூலம் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கும் திறனை ஊக்குவித்தது.

அறிவியல் வல்லுநர்கள் : நடைமுறைத் திட்டங்கள் மற்றும் நேரடி விளக்கங்கள் மூலம் மாணவர்களின் கருத்தியல் புரிதலைச் சோதித்தது.

கோவை மண்டலச் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேடையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர்களுக்குச் சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் லேப்டாப், டேப்லெட்டுகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த வெற்றியாளர்கள், இப்போது ஜனவரி 2026-இல் நடைபெறவுள்ள தேசியப் பெரும் இறுதிப் போட்டியில் (National Grand Finale) பங்கேற்று, இந்தியா முழுவதிலுமிருந்து வரும் சிறந்த போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள்.

மேலும் படிக்க