• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி

December 13, 2025 தண்டோரா குழு

புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவையில் 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை 2026 எனும் மாபெரும் நிகழ்ச்சி புரோசோன் வணிக வளாகத்தில் வரும் 31 ந்தேதி மாலை நடைபெற உள்ளது.ஸ்டெல்லர் எக்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் இணைந்து நடத்த உள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் ஸ்டெல்லர் எக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹர்ஷினி மகேந்திரன், மற்றும் அவரது குழுவினர் ஸ்ரீராம் ,அருண், நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பிரபல பாடகர் கிரீஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய பாடகர் கிரிஷ்,

கோவையில் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிகளை ரசிக்க ரசிகர்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர்,வரும் புத்தாண்டில் புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள நம்ம கோவை நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டு பாட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சி ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டமாக நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர்,தம்முடன் இணைந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நட்சத்திர பாடகர்களும் பாட உள்ளதாக தெரிவித்தார்.

இதில் பிரபல திரைப்படங்களில் தாம் பாடிய பெரும்பாலான ஹிட் பாடல்களை பாட உள்ளதாக அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்புக்கென அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்,நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கி உள்ளதாகவும், டிக்கெட்டிகளை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க