• Download mobile app
10 Dec 2025, WednesdayEdition - 3591
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் புதிய “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” தொடக்கம் தனது ரீடெய்ல் செயல்பாட்டை விரிவாக்கும் பெப்ஸ் மேட்ரெஸ்

December 10, 2025 தண்டோரா குழு

ஸ்பிரிங் மேட்ரஸ் தயாரிப்புகள் மற்றும் சிறப்பான உறக்கத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோவை மாநகரில் ஒரு முக்கியப் பகுதியான கணபதியில், ஒரு புதிய பிரத்யேக பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரை தொடங்கியிருப்பதன் வழியாக, தனது செயலிருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இம்மாநகரில் ஏற்கனவே தனது விற்பனையகத்தை கொண்டிருக்கும் பெப்ஸ், இப்புதிய ஸ்டோரின் தொடக்கத்தின் மூலம் தனது செயற்பரப்பை இன்னும் விசாலமாக்கியிருக்கிறது.தனது மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றான கோவையில் உலகத் தரத்தில் உறக்கத் தீர்வுகளை வழங்கும் தயாரிப்புகள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களது அமைவிடங்களுக்கு அருகிலேயே கிடைக்குமாறு செய்வதில் இந்த பிராண்டு கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ்–ன் துணைத் தலைவர் C.N. ராஜேஷ் இந்த புதிய ஸ்டோரை திறந்து வைத்தார். தமிழ்நாடு முழுவதிலும் தனது ரீடெய்ல் செயல்பாடுகளை விரிவாக்க தீவிர முன்னெடுப்புகளை பெப்ஸ் எடுத்து வரும் நிலையில்,இந்த நிகழ்வு அதன் பயணத்தில் மற்றுமொரு சிறப்பான மைல்கல்லைக் குறிக்கிறது.இந்த பிராண்டு, முக்கிய கவனம் செலுத்தும் சந்தைகளுள் ஒன்றாக கோயம்புத்தூர் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்கால நவீன யுகத்திற்கு ஏற்றவாறு, சிறப்பான உறக்க அனுபவ மையமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரில் இந்த பிராண்டின் சிறந்த தயாரிப்புகளான ஸ்பிரிங், ஃபோம் மற்றும் காயர் மெத்தைகள்,ப்ரீமியம் தலையணைகள்,மெத்தைகளுக்கான பாதுகாப்பு உறைகள் மற்றும் உறக்கத்திற்கு உதவும் துணைப் பொருட்களின் முழுமையான தொகுப்பை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்த்து, விளக்கங்கள் பெற்று, தகவலறிந்த
முடிவுகளை எடுக்க உதவுகிறது.

வாடிக்கையாளர்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தயாரிப்புகளை பரிசோதித்துப் பார்த்து அவற்றின் வெவ்வேறு சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து, தங்களின் சௌகரியம் மற்றும் வாழ்க்கை முறை தேவைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான முடிவுகளை எடுத்து அவற்றை வாங்கலாம். இங்கு பணிபுரியும் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, தகவலறிந்த முடிவை செய்வதற்கு உகந்த சூழலை இந்த ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நவீன வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, பெப்ஸ் கம்ஃபர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம், பெப்ஸ் சுப்ரீயர் ஸ்பிரிங் என்ற பெயர்களில் நான்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொகுப்புகளை பெப்ஸ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது; இவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த உடல் ஆதரவு, சொகுசு மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்டோரின் திறந்து விழாவின்போது உரையாற்றிய பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – ன் துணைத் தலைவர் C.N. ராஜேஷ் கூறியதாவது:

“பெப்ஸ் – ன் ரீடெய்ல் (சில்லறை விற்பனை) வீச்செல்லையை வலுவாக்குவது மீதும் மிகச்சரியான உறக்கத் தீர்வுகளுக்கு எளிதான அணுகலை நுகர்வோர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்வது மீதும் எப்போதும் எமது சிறப்பு கவனம் இருந்து வருகிறது. கோயம்புத்தூரில் இப்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய கிரேட் ஸ்லீப் ஸ்டோர், முறைப்படுத்தப்பட்ட, ப்ரீமியம் தரத்திலான உறக்கத்தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் ஒரு சந்தையாக திகழும் கோயம்புத்தூரில் எமது அனுபவ ரீதியான ரீடெய்ல் செயல்பாட்டு அமைவிடத்தை விரிவாக்குவதில் ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையாகும். எமது தயாரிப்புகளது அணிவரிசையை நேரில் கண்டு, தெளிவான விளக்கத்தைப் பெறவும், தங்களது உறக்கத் தேவைகளை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளவும் மற்றும் தகவலறிந்த நிலையில் அறிவார்ந்த தேர்வுகளை செய்யவும், வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்டோர் உதவுகிறது. பெப்ஸ் பிராண்டின் ஒவ்வொரு சில்லறை விற்பனையகத்தின் வழியாக நிலையான தரம் மற்றும் சௌகரியத்தை நுகர்வோர்களுக்கு வழங்குவதில் வலுவான அர்ப்பணிப்பை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.”

சுமார் 1100 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரத்யேக ஸ்டோர், ஒரு அனுபவ ரீதியிலான ஸ்லீப் ஸ்டுடியோவாக சேவையாற்றும். வாடிக்கையாளர்கள், பெப்ஸ் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப் பொருட்களைப் புரிந்து கொள்ளவும், சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கவும் தங்களது தேவைகளுக்கு உகந்தவற்றை தேர்ந்தெடுக்க சரியான முடிவை எடுக்கவும் உதவுகின்ற ஒரு ‘இன்டராக்டிவ்’ சூழலை இந்த ஷோரூம் வழங்கும்.

தற்போது இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்டு விற்பனையகங்கள் மற்றும் 91 பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் பெப்ஸ் தனது சேவையை வழங்கி வருகிறது. இனிவரும் ஆண்டுகளில், முக்கிய நகரங்களிலும் மற்றும் வளர்ந்து வரும் சிறுநகரங்களிலும் தனது பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களை’ நிறுவி தனது ரீடெய்ல் வலையமைப்பை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க