November 28, 2025
தண்டோரா குழு
மஹிந்திரா புத்துணர்ச்சியூட்டும் அர்த்தமுள்ள உணர்வுடன் விசாலமான இட வசதியுடன் அதன் இங்லோ கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் 7 இருக்கையுடன் கூடிய பிரமாண்ட புதிய எலக்ட்ரிக் காரான ‘எக்ஸ்இவி 9எஸ்’ என்னும் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த காருக்கான முன் பதிவு வரும் ஜனவரி மாதம் 14-ந்தேதி துவங்குகிறது. இது ஜனவரி 23 முதல் டெலிவரி செய்யப்படுகிறது.வாழ்க்கை, கனவுகள் மற்றும் அன்றாட பயணங்கள் என அனைத்தும் விரிவாகிக் கொண்டிருக்கும் மக்களுக்காக நவீன வடிவமைப்பில் விசாலமான எஸ்யூவி காரகாக குடும்பங்கள், படைப்பாளிகள், பயணிகள் என அனைவருக்கும் ஏற்ற இந்தியாவின் புதிய பெரிய மின்சார காராக எக்ஸ்இவி 9எஸ் வெளிவருகிறது.இந்த கார் மஹிந்திராவின் இங்லோ மின்சார வாகன தளத்தில் மஹிந்திரா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
அதன் விசாலமான உட்புறம், அதிநவீன தொழில்நுட்பத்திலான வடிவமைப்பு, எந்தவித இரைச்சலும் இல்லாத அமைதியான ஓட்டுதல் அனுபவம் மற்றும் சொகுசான பயணம் என அனைத்தையும் ஒருங்கே இந்த கார் கொண்டுள்ளது. இது குறித்து மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொடிவ் வர்த்தக பிரிவு தலைவரும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ஆர். வேலுசாமி கூறுகையில், மனிதர்கள் தங்கள் திறன்களை விரிவுபடுத்தும்போதுதான் தொழில்நுட்பம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில் எங்கள் இங்லோ மின்சார வாகன கட்டமைப்பு தளத்தில் தயாராகும் எக்ஸ்இவி 9எஸ், வேறு எந்த கார்களையும்விட அதிக இட வசதியை வழங்குவதோடு மென்மையான மற்றும் சொகுசான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலும் எங்களின் மஹிந்திரா செயற்கை நுண்ணறிவு மூலம் பல உயர் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொடிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நளினிகாந்த் கொல்லகுண்டா கூறுகையில்,இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து இயக்கம் என்பது, வாகனங்களை மின்மயமாக்குவது மட்டுமல்லாமல், அதன் வகைகளை மறுபரிசீலனை செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமானதாக இருக்கும். அந்த நிறுவனங்கள் மட்டுமே இந்த துறையில் சிறப்பாக செயல்பட முடியும். எங்களின் இந்த புதிய எக்ஸ்இவி 9எஸ் கார் ஒரு பெரிய புதிய மின்சார சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தியா இந்த துறையில் எவ்வாறு முன்னோக்கி செல்கிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.19.95 லட்சம் முதல் துவங்குகிறது என்று தெரிவித்தார்.