November 22, 2025
தண்டோரா குழு
கோவை பாலதுறை அருகே உள்ள ஸ்டடி வேர்ல்ட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான யுவ ஆடுகளம் என்ற விளையாட்டுப் போட்டிகள் நேற்று
முன்தினம் துவங்கியது.
விளையாட்டுப் போட்டியினை ஸ்டடி வேர்ல்ட் கல்லூரியின் நிர்வாக தலைவர் வித்யா வினோத் அறிவுறுத்தலின்படி கல்லூரியின் நிர்வாக அலுவலர் எம்.எம். மனோகரன், தலைமை செயல் அதிகாரி கோமதி, கல்லூரி முதல்வர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விளையாட்டுப் போட்டியில் கோவை மண்டலத்தை சேர்ந்த 47 பள்ளிகளில் இருந்து 610 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, கபடி, வாலிபால் போட்டிகளும், மாணவிகளுக்கு த்ரோ பால், கோக்கோ, இறகு பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, பட்டிமன்றம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளும்
நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற விமானப்படை பணியாளர் மோகன் குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கீதா கூறுகையில்,
சர்வதேச நோ கெஸட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உட்பட அனைத்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்றார்.