• Download mobile app
21 Nov 2025, FridayEdition - 3572
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ஜவுளி சங்கம் – தென்னிந்திய பிரிவு சார்பில் கோவையில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு துவக்கம்

November 21, 2025 தண்டோரா குழு

இந்திய ஜவுளி சங்கம் (தென்னிந்திய பிரிவு) சார்பில் 78வது அகில இந்திய ஜவுளி மாநாடு கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று தொடங்கியது.

“உலகளாவிய ஜவுளிகள் – வாய்ப்புகளை வெளிப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 21 மற்றும் 22) இந்த மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ஸ் அண்ட் கலரிஸ்ட்ஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பல முக்கிய அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இடம்பெறுகின்றன.

எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சஞ்சய் ஜெயவர்த்தனவேலு அவர்கள், மாநாட்டின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். நாடு முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த முக்கியமான ஜவுளித் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்திய ஜவுளி சங்கம் (தென்னிந்திய பிரிவு) தலைவர் இ.சத்யநாராயணா வரவேற்புரை வழங்கினார்.இந்திய ஜவுளி சங்கத்தின் தேசியத் தலைவர் டி.எல். படேல், ஜவுளி துறைக்கு இந்த சங்கத்தின் பங்களிப்பு குறித்துப் பேசினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் கே.ராமலிங்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இந்த நிகழ்வில் இந்திய ஜவுளி சங்கத்தின் அடுத்த தலைவர் விஜ் பங்கேற்றார்.

பிரீமியர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர். கே.வி. சீனிவாசன்,சிறப்புஉரை வழங்கினார்.ஜவுளி துறையில் மூலப்பொருளில் (பருத்தி) தன்னிறைவு பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது, இருப்பினும்,பருத்தி உற்பத்தியில் மகசூல் குறைந்ததால், இந்த சாதக நிலையை இந்தியா மெதுவாக இழந்து வருகிறது என கூறினார்.எனவே, விதைகள் மேம்பாடு, உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகியவற்றில் அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். இதுவே இப்போதைய அத்தியாவசியத் தேவையாகும் என்றும், ஜவுளித் தொழில் உற்பத்தித் துறைக்கு அரசாங்கம் இந்த வகையில் உதவ முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்,எல்.எம்.டபிள்யூ தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு அவர்களின் கரங்களால் பள்ளிப்பாளையம் பல்லவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி மற்றும் தேனி எல்.எஸ். மில்ஸ் லிமிடெட் தலைவர் எஸ்.மணிவண்ணன் ஆகியோருக்கு ‘தொழில்சார் சிறப்பு விருதுகள்’ (Industrial Excellence Awards) வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கே.எம். நிட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எம்.சுப்பிரமணியம் மாநாட்டின் மலரை வெளியிட்டார், அதன் முதல் பிரதியை சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் பெற்றுக்கொண்டார்.

சிட்ரா (SITRA) நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் டி. ராஜ்குமார் தனது உரையில், ஜவுளித் துறைக்கு மத்திய அரசு அளித்த ஆதரவை எடுத்துரைத்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுடன் ஃஎப்.டி.ஏ. எனும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டது; ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள், பாலியஸ்டர் இழைகள் மீதான தரக் கட்டுப்பாடு ஆணை நீக்கியது, அமெரிக்காவின் வரி விதிப்பு சவால்களைச் சமாளிக்க நிதி மற்றும் ஏற்றுமதி நிவாரண நடவடிக்கைகள் கொடுத்தது, பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு, ரூ.4000 கோடிக்கும் அதிகமான செலவில் 7 பி.எம் மித்ரா ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதாக அறிவித்தது (இதில் முதல் பூங்கா தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் திட்டமிடப்பட்டுள்ளது) போன்ற பல உதவிகளை அவர் பட்டியலிட்டார்.

“இத்தகைய சீர்திருத்தங்களால், வரும் ஆண்டுகளில் இந்திய ஜவுளித் தொழில் தொடர்ந்து சவாலைகளை எதிர்த்து போராடும் வலுவான திறனையும் போட்டித்தன்மையையும் வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தனது தலைமை விருந்தினர் உரையை வழங்கினார்.

அவர் பேசுகையில்,

இந்தியாவில் ஜவுளித் தொழில் சில கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார். இந்த எதிர்பாராத சவாலான நேரத்தில் தன்னை உட்பட சகல இந்திய தொழில்முனைவோர் முன்பு இரண்டு தேர்வுகள் தான் உள்ளன என கூறினார் – அதில் ஒன்று சவால்களை எதிர்கொள்வது அல்லது பலவீனமாகி போவது என்றார்.

இப்படி ஒரு சவாலான நேரத்திலும் மத்திய அரசின் தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பான கைகளில் உள்ளது என்பதையும், அங்குள்ள தலைமை இந்த மிகவும் கடினமான, சவாலான காலக்கட்டத்தை கடந்து செல்ல நாட்டிற்கு வழிவகுக்க நல்ல முயற்சிகளை செய்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா எனும் இந்த பெரிய பொருளாதாரம் அதன் பாதையில் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதை உறுதிப்படுத்த, நமது நாட்டின், அரசின் சிறந்த திறமைகள் செயல்படுகின்றன.

மேலும் படிக்க