• Download mobile app
20 Nov 2025, ThursdayEdition - 3571
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வலிமையான எலும்புகளுக்கும் நல்வாழ்வுக்கும் ஆதாரமான மூலப்பொருட்களைக் கொண்ட ‘நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரோன்’ஆம்வே இந்தியா அறிமுகம்

November 20, 2025 தண்டோரா குழு

இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக ஆரோக்கியமான வாழ்க்கையை அடைவதற்காக முழுமையான நல்வாழ்வை நோக்கி நுகர்வோர் திரும்புகின்றனர்.

வைட்டமின் டி பற்றாக்குறை என்பது ஒரு அமைதியாகப் பரவும் தொற்றுநோய் ஆகும், இது பல்வேறு வயதுடைய மக்களைத் தொடர்ந்து பாதிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளை முன்கூட்டியே நிவர்த்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நுகர்வோரின் தேவைகளால் தூண்டப்பட்டு தன் ஊட்டச்சத்து நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கும் முன்னணி நிறுவனமான ஆம்வே இந்தியா உகந்த வைட்டமின் டி அளவைப் பராமரித்து எலும்பு மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்துக்கு உதவும் மூலப்பொருட்களைக் கொண்ட நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரான் என்ற அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட செய்முறையை ஆம்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குநர். ரஜ்னீஷ் சோப்ரா கூறுகையில்“

இன்றைய வேகமான உலகில் மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், உடலுக்குத் தேவையான சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதனாலும் இந்தியா முழுவதும் வைட்டமின் டி குறைபாடு என்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. சுமார் 80-90% இந்தியர்களுக்கு வைட்டமின் டி போதுமான அளவுக்கு இல்லை என்றும் இது காலப்போக்கில் எலும்புகளையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வுகள் தொடர்ந்து எடுத்துக்காட்டுகின்றன.

இந்த அவசரத் தேவையைப் புரிந்துகொண்டு மக்கள் தங்கள் நல்வாழ்வு இலக்குகளை அடைய உதவும் வகையில் ஆம்வே அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஊட்டச்சத்து பிரிவை வலிமைப்படுத்துவதோடு புத்தாக்கங்களை துரிதப்படுத்தியும் உத்திசார்ந்த வழிமுறைகளில் கவனம் செலுத்தியும் வருகிறது. அதன் ஒரு பகுதியாக உறுதியான எலும்புகளையும் முழுமையான ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும் மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட எங்கள் புதிய படைப்பான நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம்.

இந்த ஆற்றல் வாய்ந்த செய்முறையைப் பற்றி ஆம்வே இந்தியாவின் தலைமை மார்க்கட்டிங் அதிகாரியான அம்ரிதா அஸ்ரானி கூறுகையில் எலும்புகளின் கட்டமைப்பையும் அடர்த்தியையும் வலிமைப்படுத்த கால்சியத்தை உறிஞ்சுவதில் வைட்டமின் டி 3 முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் போரான் வைட்டமின் டி பயன்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் வைட்டமின் கே2 மிகவும் முக்கியமாகக் கால்சியம் தேவைப்படும் இடங்களில் எலும்புகளுக்கு அது திறம்பட வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. வைட்டமின் டி 3 தேவையை நிறைவு செய்யும் வகையில் லைகோரைஸ் மற்றும் குர்செட்டின் ஆகியவற்றின் காப்புரிமை பெற்ற கலவை எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு இயற்கையான முறையில் ஆன்டிஆக்சிடன்ட் ஆதரவையும் வழங்குகிறது.

இவ்வாறு எலும்பு ஆரோக்கியத்தை உள்ளிருந்து உருவாக்கும் ஒரு தனித்துவமான மூன்று அடுக்குப் பாதுகாப்பு அமைப்பை உண்டாக்குகிறது. நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரான் நியூட்ரிலைட்டின் 90+ ஆண்டுகால ஊட்டச்சத்து நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் மூலப்பொருட்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க