• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்பங்களுக்கான சர்வதேச ரோமிங் சேவையான ஃபேமிலி இன்டர்நேஷனல் ரோமிங் பேக்குகள் மிகவும் மலிவு விலையில் விஐ நிறுவனம் அறிமுகம்

November 18, 2025 தண்டோரா குழு

இந்தியா தற்போது வெளிநாட்டு பயணங்களில் கணிசமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட இந்திய சுற்றுலா தரவு தொகுப்பு 2025-ன் படி, 2024-ம் ஆண்டில் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 10.79% உயர்ந்து, மொத்தம் 30.89 மில்லியனாக அதிகரித்துள்ளது.

தொழில் துறை தரவுகள், இந்தியர்கள் அதிகமாக குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவதாகக் காட்டுகின்றன. சமீபத்திய தொழில்துறை அறிக்கையின்படி* சுமார் 59% இந்தியர்கள் துணைவருடன்/இணையருடன் பயணம் செய்கிறார்கள், மேலும் 26% இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்கிறார்கள்.இன்றைய உலகம் முழுவதுமுள்ள குடும்ப பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விஐ நிறுவனம், குடும்ப வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சர்வதேச ரோமிங் பேக்குகளை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு இன்டர்நேஷனல் ரோமிங் பேக் தள்ளுபடி சலுகைகளின் மூலம் தொலைத்தொடர்புத் துறையில் முதல் முறையாக குடும்ப உறுப்பினர்களுக்கான ஃபேமிலி இண்டர்நேஷனல் ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விஐ வாடிக்கையாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் காலத்தில் சர்வதேச ரோமிங்கை மேலும் மலிவான கட்டணத்தில் பயன்படுத்தி பெரும் பலன்களைப் பெற உதவுகிறது. தற்போது இன்டர்நேஷனல் ரோமிங் சேவையில் உண்மையிலேயே வரம்பற்ற தரவு & குரல் அழைப்பு பலன்களை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் விஐ என்பதால், குடும்பங்கள் வெளிநாட்டில் இருக்கும்போதே, எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் தங்கு தடையற்ற இணைப்பில் தொடர முடியும்.

இந்தியாவில் மிகப்பெரிய போஸ்ட்பெய்ட் மற்றும் ஃபேமிலி போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்குள்ள தேவைகளின் அடிப்படைகளில் சேவையை விஐ வழங்கி வருகிறது. குடும்பங்கள் வெளிநாட்டு பயணத்தின் போது தடையின்றி இணைப்பில் இருக்கவும் மேலும் சேமிக்க உதவுவதற்காகவும் விஐ நிறுவனம் இத்துறையில் முதன்மையான ஃபேமிலி இன்டர்நேஷனல் ரோமிங் ப்ரபோஷிஸன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இன்டர்நேஷனல் ரோமிங் பேக்குகளை எடுத்துக்கொள்ளும் இரண்டாம் நிலை குடும்ப உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க