• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அற்புதமான மின்சார வாகனம் டிவிஎஸ் ஆர்பிட்டர் கோவையில் அறிமுகம்

November 7, 2025 தண்டோரா குழு

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய மின்சார வாகனமான டிவிஎஸ் ஆர்பிட்டர் -ஐ தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் கோவையில் நடைபெற்ற டிவிஎஸ் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங்-ஈவி பிசினஸ் டிஜிஎம்.ரிஷு குமார் கலந்துகொண்டு அறிமுகப்படுத்தி பேசினார். அன்றாட பயணத்தை மறுவரையறை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கக்கூடிய ஐடிசி வரம்பை அளிக்கிறது.

மேலுன் க்ரூஸ் கண்ட்ரோல், 34-லிட்டர் பூட் ஸ்பேஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்பட்ட இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள் என இவ்வாகனப் பிரிவிலேயே முதல் அம்சங்களை அதிகம் வழங்குகிறது. மேலும்,இருசக்கர வாகன தொழில்துறையில் முதல் முறையாக 14” முன் சக்கரத்துடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை ரூபாய்.1,03,100 (எக்ஸ்-ஷோரூம், பிஎம் இ டிரைவ் திட்டம் திட்டம் உட்பட) என்ற கவர்ச்சிகரமான விலையில் மேம்பட்ட வசதி மற்றும் அபாரமான செயல்திறனை வழங்குகிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் போன்ற அற்புதமான வண்ணகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர் இணைப்பு தொழில் நுட்பத்தினால் செயல்படும் மொபைல் செயலி, முன்பக்கம் அட்டகாசமான வைசருடன் முன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் போன் அழைப்பை அறிவிக்கும் திரையுடன் கூடிய வண்ண எல்சிடி போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அட்டகாசமாக களமிறங்கியுள்ளது.

இதன் 3.1 கிலோவாட் பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் ஆற்றல், தங்கு தடையில்லாத நிலையான, அபாரமான செயல்திறனுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் – ஹெட், கம்மூட்டர் & இவி பிசினெஸ் & ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா அனிருத்தா ஹால்டார் கூறுகையில்

“மின்சார வாகனத் துறையில் எங்கள் தலைமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும், நம்பிக்கை மற்றும் புதுமையின் வலுவான அடித்தளத்துடன் இந்தியாவின் மின்சார வாகனப் பயணத்தை இயக்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறோம்.எங்கள் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அறிமுகமாகி இருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டர், நகரப் பயணத்தை மறுபரிமாணப்படுத்தும் எங்கள் அடுத்தடுத்த முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அன்றாட நகர்ப்புற பயணத்தை மறுவரையறை செய்வதில் எங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை குறிக்கிறது.

இது மேம்பட்ட தொழில்நுட்பம், ஏரோடைனமிக் ஆற்றல், விசாலமான வசதி மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகமாகும் அம்சங்களுடன் அன்றாட பயன்பாட்டின் பல்வேறு எதிர்பார்புகளை பூர்த்தி செய்கிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் இந்தப் பிரிவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது நிலையான வாகனப் போக்குவரத்தை எளிதில் அடையக்கூடியதாகவும், ஆர்வமுள்ளதாகவும் மாற்றும்.” என்றார்.அபாரமான செயல்திறன் மற்றும் வாகன கட்டுப்பாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் டைனமிக் ரியர் கான்ஃபிகுரேஷன் உடன் இணைக்கப்பட்ட 14” முன் சக்கரம், நகர்ப்புற பயணத்தின் போது சாலையில் வழுக்காத வகையில் செல்வதையும், எளிதில் கையாள்வதையும், போக்குவரத்து நெரிசலிலும் கூட இலகுவாக ஓட்டுவதையும் உறுதி செய்கின்றன.

டிவிஎஸ் ஆர்பிட்டர் அசர வைக்கும் அழகியல் மற்றும் அபாரமான செயல்பாடு இவை இரண்டுக்கும் இடையில் ஒரு சரிசமமான ஒருங்கிணைப்பாக அமைந்திருக்கிறது. 845 மிமீ நீளமான இருக்கை சவாரி செய்பவர் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவருக்கும் செளகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 290 மிமீ ஸ்ட்ரெயிட்-லைன் ஃபுட்போர்டு போதுமான இடவசதியுடன் லெக் ரூம்மை உறுதி செய்கிறது. அகலமான மற்றும் அப்-ரைட் ஹேண்டில்பார் இலகுவாக ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, இதன் 34 லிட்டர் இருக்கைக்கு அடியில், மிகப்பெரும் சேமிப்பகம் உள்ளது.இதில் இரண்டு ஹெல்மெட்களை வைக்குமளவிற்கு தாராளமான இடவசதி உள்ளது.

மேலும் படிக்க