• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

January 31, 2017 தண்டோரா குழு

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ தேர்வு முறையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மருத்துவப் பாடப் பிரிவுகளில் மானவர்கள் சேர ‘நீட்’ தேர்வை (தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு) எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் 2௦16 ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அரசு இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பாடப் பிரிவுகளில் சேர கண்டிப்பாக மாணவர்கள் “நீட்’ தேர்வை எழுத வேண்டும்.

இந்த சட்டத்தை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன இதனால் உடனடியாக தமிழகத்தில் நீட் தேர்வு முறை அமல்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு 2௦16 ஆம் ஆண்டு பிறப்பித்தது.

இந்நிலையில் ‛நீட்’ தேர்வை நிரந்தரமாக எதிர்த்து, பழைய முறையையே பின்பற்ற சட்டபையில், சட்ட முன்வடிவை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இதன் படி பழைய முறைப்படி, பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளம்கலை மற்றும் முதுகலை என இரண்டு வகைகளிலும், பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடக்கவும் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

‛நீட்’ தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த சட்டமுன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க