November 7, 2025
தண்டோரா குழு
கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவை கோலாகலமாக நடத்தியது. தனது கல்வி மற்றும் நிறுவன முன்னேற்றப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதித்தது.கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள்,அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 78 புரிந்துணர்வு ஒப்பந்தம்உடன்படிக்கை அடிப்படையில் கையெழுத்திடப்பட்டன.
இது கல்வி மேம்பாடு, புதுமை, சமூகப் பொறுப்பு மற்றும் நாட்டிற்கான பங்களிப்பில் கல்லூரியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), நாஸ்காம் (NASSCOM), நான் முதல்வன், வெற்றி நிச்சயம் மற்றும் கல்வி அமைப்புகள் 23, தொழில் அமைப்புகள் 40, அரசு சாரா அமைப்புகள் 15, ஆகியவற்றுடன் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம்.ஓ.யூ) கையெழுத்திடப்பட்டன. கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் வேலைஇல்லா இளைஞர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குதல், மேலும் தமிழக அரசு இணைந்த திறன் மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பணிகள் இவ்வமைப்புகளுடன் அமைப்புகளின் நிறுவனர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் வாயிலாக பெரிய இலக்கை அடைவதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஆராய்ச்சி, பயிற்சி, இத்தகைய தொழில் முயற்சி, சமூக சேவை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தி, கல்வி மற்றும் தொழில் துறைகளின் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தின் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ட்-அப் TN நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் மா அகிலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
அவர் விழாவில் பேசும்போது,
கல்லூரியின் 78 ஆண்டின் நிறைவில் 78 எம் ஓ யு கள் உடன்படிக்கை ஒப்பந்தம் நிகழ்த்தப்பட்டது மிகப்பெரிய அரிய சாதனை இது கல்லூரியின் அருமையானதொரு சாதனை வருங்காலத்தில் இக்கல்லூரியின் மிகப்பெரிய உன்னத என்று குறிப்பிட்டார். மேலும் இத்தகைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
கல்லூரிச் செயலர் அருட்சகோ. குழந்தை தெரஸ் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோ.முனைவர் மேரி பபியோலா நிகழ்வைத் தொடக்கிவைத்தார்.
கல்லூரியின் உயர்தரக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்பு 78 ஆண்டுகள் – 78 எம்.ஓயூககள் எனும் இந்த வரலாற்றுச் சாதனையை நிர்மலா மகளிர் கல்லூரி நிகழ்த்தி இருப்பது
குறிப்பிடத்தக்கது.