October 27, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், டாடா ஏஐஏ ஷுப் பேமிலி ப்ரொடெக்ட் என்னும் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது உடனடி மொத்த காப்பீடு தொகை உடன் 30 ஆண்டுகள் வரை மாதாந்திர வருமானம் இரண்டையும் வழங்கும் ஒரு சிறப்பு திட்டம் ஆகும். குடும்பங்களுக்கு விரிவான நிதிப் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டம், நிச்சயமற்ற காலங்களில் மன அமைதியை விரும்புபவர்களுக்கு ஏற்றது என்று டாடா ஏஐஏ தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏற்படும் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் ஒருவருக்கு திடீரென ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் மன வருத்தம் அளவிட முடியாதது, அதைத் தொடர்ந்து ஏற்படும் நிதிச் சுமையும் அதே அளவு அதிகமாக உணரப்படும். எனவே அந்த காலக்கட்டத்தில் குடும்பத்தை வழி நடத்திச் செல்வதற்கு பெரும் தொகை தேவைப்படலாம். அதை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த புதிய காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து டாடா ஏஐஏ தலைமை வினியோக அதிகாரி ஜீலானி பாஷா கூறுகையில்,
நாங்கள், நிதிப் பாதுகாப்புடன் கூடுதலான பலன்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும். அந்த வகையில் ஷுப் பேமிலி ப்ரொடெக்ட் என்பது குடும்பங்களுக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எங்களின் புதிய முயற்சியாகும். அவர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன். 0% ஜிஎஸ்டி இதை இன்னும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது, கூடுதல் செலவுகளின் சுமை இல்லாமல் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவோருக்கு இந்த காப்பீடு சிறந்த ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
டாடா ஏஐஏவின் ஷுப் பேமிலி ப்ரொடெக்ட் இந்த சவாலைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரே முறையில் பெரிய தொகையை மட்டும் கொடுப்பதற்கு பதிலாக, இந்தத் திட்டம் ஒரு மொத்தத் தொகையின் பலனையும் நிலையான மாதாந்திர வருமானத்தின் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கிறது – இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு பாதுகாப்பான திட்டம் ஆகும்.குடும்பங்களைப் பொறுத்தவரை, இந்த அணுகுமுறை, தங்களின் சேமிப்பு பணம் செலவாகிவிடுமோ என்ற கவலை இல்லாமல் உடனடி நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
இறுதிச் சடங்குச் செலவுகளை ஈடுகட்டுதல், கடன்களை அடைத்தல் அல்லது பிற அவசரச் செலவுகளைக் கையாளுதல் போன்ற உடனடி தேவைகளுக்கு மொத்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் மாத வருமானத்தில்தான் ஷுப் பேமிலி ப்ரொடெக்டின் உண்மையான சக்தி உள்ளது. இது குடும்பம் நம்பிக்கையுடன் முன்னேற உதவும் ஒரு நிலையான, நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்குகிறது.உதாரணமாக, பணத் தேவைக்காக தங்கள் குழந்தையைச் சார்ந்திருக்கும் வயதான பெற்றோரை பொறுத்தவரை, அவர்களுக்கான காப்பீட்டின் மொத்தத் தொகை அவர்களின் உடல்நலம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படலாம், அது குறித்து அவர்கள் வருத்தப்படும் அதேசமயம், மாதாந்திர வருமானமானது அவர்களுக்குத் தேவையான பராமரிப்பைத் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்யும்.
இதன் காரணமாக அவர்களின் அன்றாடத் தேவைகள் கவனிக்கப்படுகின்றன – அவர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது.கணவனை இழந்த பெண்களுக்கு ஷுப் பேமிலி ப்ரொடெக்ட் மூலம், மாத வருமானமானது அவரது வாழ்க்கையை முடிந்தவரை சீராகத் தொடர முடியும் என்பதை உறுதி செய்கிறது. வீட்டுச் செலவுகள் முதல் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை, வழக்கமான பணம் செலுத்துதல் அவள் வாழ்க்கைத் தரத்தை தியாகம் செய்யாமல் தனது எதிர்காலத்தை உருவாக்க அடித்தளமாகிறது. அவர் வீட்டை தொடர்ந்து நிர்வகிக்கலாம், தனது குழந்தைகளைப் பராமரிக்கலாம் மற்றும் மிகவும் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
அதேபோல் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளி கட்டணம், கல்வி மற்றும் பாடநெறி நடவடிக்கைகள் அனைத்தும் ஆதரிக்கப்படுகிறது, இதனால் அவர்களின் எதிர்காலம் பணம் இல்லாமல் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.ஷுப் பேமிலி ப்ரொடெக்ட் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலன் அளிக்கும் சிறந்த காப்பீடு திட்டம் ஆகும். அது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது வயதான பெற்றோராக இருந்தாலும், ஒவ்வொருக்கும் அவர்களுக்கு ஏற்ற சிறந்த பலனை அளிக்கிறது.