October 15, 2025
தண்டோரா குழு
தனிஷ்கின் திருமண நகைகளுக்கான தனித்துவமிக்க துணை பிராண்டான ரிவா, நவீன வடிவமைப்புடன் கூடிய, பாரம்பரிய கைவினைத்திறனின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் திருமண மற்றும் பண்டிகை காலத்திற்கு அணியும் வகையில் அற்புதமான தொகுப்பை பெருமையுடன் அறிமுகம் செய்துள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் முதல் பிரமாண்ட திருமண கொண்டாட்டங்கள் வரை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ற பாரம்பரிய நகைகளை நவீன டிசைன்களில் ரிவா வழங்குகிறது, திருமணத்தன்று மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக்கும் விதமாக உங்கள் அழகிற்கு அழகு சேர்க்கும் பல்வேறு நகைகளின் தொகுப்பையும் ரிவா அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நகைகள் ஒவ்வொரு மணப்பெண்ணின் அழகிற்கும் கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக சிறந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ரிவா தெரிவித்துள்ளது. இந்த சீசனில், கசுமாலா மற்றும் டெம்பிள் ஜூவல்லரி ஆகியவை மறு வடிவமைக்கப்பட்டு புதிய டிசைன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு திருமண சடங்கிற்கும் ஏற்றது, இதில் அடுக்கு ஹாரம், பழங்கால தோடு, மணப்பெண் வளையல்கள், ஒட்டியாணம் மற்றும் ஜம்கிகள் என ஏராளமான வகைகள் உள்ளன.
ஒவ்வொரு படைப்பும் பழங்கால கைவினைத்திறன் உடன் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, பழங்கால நகாஷி மற்றும் கல் வேலைப்பாடு நுட்பங்கள் மூலம் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக இன்றைய நவீன மணமகளுக்கு பிடித்தமான வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. அதேபோல பண்டிகை காலத்தில் அணியும் பழங்கால தோடுகள், அடுக்கு நெக்லஸ்கள், ஸ்டட்டுகள் மற்றும் போல்கி மற்றும் வண்ண கற்கள் கொண்ட வளையல்கள் உங்களின் பட்டு புடவைகளுக்கு ஏற்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன, கலாச்சாரத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் சரியான சமநிலையை இவை வழங்குகின்றன. அதேபோல் அலுவலகம் மற்றும் சாதாரணமாக வெளியில் செல்லும்போது அணிந்து கொள்ளும் வகையிலான காதணிகள், மோதிரங்கள், வளையல்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரங்களில் செய்யப்பட்ட வளையல்கள் என ஏராளமாக உள்ளன.
இந்த சிறப்பு அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் நிறுவனம், கோல்டு எக்சேஞ்ச் மேளா சலுகையுடன் பல்வேறு கூடுதல் சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்தை எந்த காரட் தங்கமாக இருந்தாலும் சரி, எந்த நகைக் கடையில் வாங்கியிருந்தாலும் சரி அதை 100 சதவீத மதிப்பில் 0 சதவீத விலக்குடன் மாற்றிக் கொள்ளலாம், மேலும் தங்கத்தின் மதிப்பை இழக்காமல் புதிய நகைகளை நீங்கள் வாங்கிச் செல்லலாம். கூடுதலாக, தங்க நகைகளுக்கு ஒரு கிராமுக்கு 450 ரூபாய் வரை தள்ளுபடியையும், வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடியையும் வழங்குகிறது.
எனவே வாடிக்கையாளர்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு சரியான நேரம் இதுவென்றும் தனிஷக் கூறியுள்ளது. இந்தச் சலுகைகள் இம்மாதம் 21-ந்தேதி வரை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் கர்நாடகா முழுவதும் தனிஷ்க் ஷோரூம்களில் கிடைக்கிறது. அத்துடன் கேரளாவிலும் இந்த சலுகையை தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து தனிஷ்க் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் கூறுகையில்,
பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் துவங்கி உள்ள இவ்வேளையில், தனிஷ்கின் ரிவா, தென்னிந்திய மணமகளின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக நவீன டிசைன்களில் புதிய நகைகளை சலுகை விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. எங்கள் வடிவமைப்பானது, கசுமாலா மற்றும் டெம்பிள் ஜூவல்லரி ஆகிய நகைகளை சிக்கலான நகாஷி முறையில் கற்பனை செய்திடாத வகையில் மிகவும் அழகாக வடிவமைக்கிறோம். இது பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியதாக இருக்கும் அதேவேளையில் இன்றைய காலத்திற்கு ஏற்பவும் உள்ளது. மணப்பெண் நகைகள் மட்டுமல்லாமல், தங்கம், வைரம், போல்கி மற்றும் வண்ணக் கற்களால் செய்யப்பட்ட பண்டிகை கால மற்றும் தினசரி அணியும் பல்துறை அலங்கார நகைகளையும் நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
இது பெண்களுக்கு திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சடங்குகள் மற்றும் பண்டிகை காலங்கள் மற்றும் அன்றாடம் அணிவதற்கு ஏற்ப உள்ளது. இதன் ஒவ்வொரு படைப்பும் உங்களை வெகுவாக கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ளது. மணப்பெண்ணை தனித்துவமாக காட்டும் வகையில் வகையில் இவை உள்ளன என்று தெரிவித்தார்.