• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா

October 7, 2025 தண்டோரா குழு

கோவை குரும்பம்பாளையம் பிரிவு மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

அந்த வகையில் இந்த வருடமும் 4ம் ஆண்டு இளநிலை மாணவர்களின் விளையாட்டு விழா,பள்ளியின் நிறுவனர் டி.கனகாச்சலம், பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வசந்தராஜன் மற்றும் ஆர்.திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் விழாவில் பேசுகையில்,

விளையாட்டு என்பது ஒரு நபர் வெற்றி பெறுவதைக் காட்டிலும் அதிகமாக , ஒருவர் தோற்கடிக்கப்படுவது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கிறது ” என்று மாணவர்களிடத்தில் விளையாட்டுக் கலையை வளர்க்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் மதுக்கரை நகரக் கழகச் செயலாளர் சண்முகராஜா கலந்து கொண்டார். பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் வனிதா திருமூர்த்தி அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். விழாவில் தேசியக்கொடியை சிறப்பு விருந்தினரும் பள்ளியின் கொடியை முதல்வரும்,விளையாட்டுக் கொடியை விளையாட்டுத் துறை தலைவரும் ஏற்றினர்.

தொடர்ந்து,மாணவர்களின் அணிவகுப்பு, தொடர் பயிற்சி,மல்லர் கம்பம், கராத்தே , யோகா,சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க