September 29, 2025
தண்டோரா குழு
பிஎல் கேப்பிடல் (பிரபுதாஸ் லில்லாதர்)-இன் வெல்த் மேலாண்மைப் பிரிவான பிஎல் வெல்த்-இன் வெளியீடான மார்கெட் அவுட்லுக் – செப்டம்பர் 2025-இல், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவின் மீள்தன்மையுடைய மேக்ரோ பொருளாதார உந்துதலை கோடிட்டுக்காட்டியுள்ளது.
ஒரு வழக்கமான பருவமழை, நீடித்த கொள்கை சீர்திருத்தங்கள், அரசாங்க மூலதனச் செலவு மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை ஆதரிக்கும் சேமிப்புகளின் நிதிமயமாக்கல் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் இது, இந்திய பங்குச் சந்தைகளுக்கான நேர்மறையான நீண்ட காலக் கண்ணோட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இந்த அறிக்கையின்படி, க்யூ1 . எஃப் ஒய் 26-க்கான இந்தியாவின் ஜிடிபி -ஆனது, 7.8% ஒய்ஓஓய் என்றளவில் ஆச்சரியப்படும் வகையில் உயர்ந்துள்ளது.
இதற்கு வலுவான உற்பத்தி, ஃப்ரண்ட்-லோடேடு அரசாங்க மூலதனச் செலவு மற்றும் ஒரு சாதகமான பணவாட்டக் காரணி, 6.9% என்ற எதிர்பார்ப்புகளை விஞ்சியது ஆகியவை காரணிகளாகும். செப்டம்பர் 2025 முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம், இந்த கண்ணோட்டமானது மேலும் அதிகரித்துள்ளது. இச்சீர்திருத்தமானது வளர்ச்சியை 0.2–0.3% என்றளவில் அதிகரிக்கும், நுகர்வைத் தூண்டும் மற்றும் பணவீக்கம் சார்ந்த அழுத்தங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேர்மறையான அம்சங்களுடன், வளர்ச்சி மீள்தன்மை மற்றும் நிதி விவேகம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, எஸ்&பி ஆனது, 18 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை பிபிபி (நிலையானது) என மேம்படுத்தியது. அதேவேளையில், ஜூலை 2025-இல் சிபிஐ பணவீக்கமானது, கடந்த 97 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 1.55% ஆகக் குறைந்ததன் மூலம், வட்டி விகிதக் குறைப்புக்கான கொள்கை வாய்ப்பை உருவாக்கியது. சேவைகள் துறையின் செயல்பாடும் வலுவாக உள்ளது;
ஆகஸ்ட் மாதத்தில் சேவைகள் பிஎம்ஐ ஆனது, கடந்த 15 ஆண்டுகளில் மிக அதிகமாக, 62.9 என்ற அளவில் இருந்தது. இருப்பினும், இந்தியாவுக்கான சவால்கள் இன்னும் நீடித்த வண்ணம் உள்ளன என்று பிஎல் வெல்த் குறிப்பிடுகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் இந்தியா 50% வரிகளை எதிர்கொள்கிறது; இதனால், உலகளவில் ஜவுளி, ஆட்டோ உதிரிபாகங்கள், லெதர், ரத்தினக் கற்கள் மற்றும் இறால் ஆகியவற்றின் ஏற்றுமதியைப் பாதிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 4 பில்லியன் யூஎஸ்டி.-ஐ முதலீட்டிலிருந்து வெளியே எடுத்தது, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாதாந்திர வெளியேற்றத்தைக் குறிக்கிறது.
அதேவேளையில் பஞ்சாபில் நாற்பது ஆண்டுகளில் இல்லாத சமீபத்திய மிக மோசமான வெள்ளமானது 1.75 லட்சம் ஹெக்டேர்களுக்கு மேல் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற வருமானம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் வணிகப் பற்றாக்குறையானது, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவில், 27.4 பில்லியன் யூஎஸ்டிஆக அதிகரித்த அதேவேளையில், நகர்ப்புறத் தேவையானது தொடர்ந்து பலவீனமாக இருந்து வருகிறது.
பிஎல் வெல்த் மேனேஜ்மென்ட்-இன் சிஇஓ -ஆன இந்தர்பீர் சிங் ஜாலி-இன் கூற்றுப்படி,
“வலுவான உந்துசக்தியை வழங்கும் சீர்திருத்தங்கள், மூலதனச் செலவு உந்துதல் மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவற்றுடன், இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சிக் கதையானது பாதிப்புக்குள்ளாகாமல் அப்படியே உள்ளது. வரி என்னும் எதிர்காற்று மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மைகள் ஆகியவை குறுகிய கால உணர்வை எடைபோடும் அதேவேளையில், பண்பட்ட முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கான தரமான சொத்துக்களைக் குவிப்பதற்கு, சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம்”. என்றார்.