• Download mobile app
29 Sep 2025, MondayEdition - 3519
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று: புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட லெவிடாஸ் கோப்பை போட்டியில் கோவை வீரர் ஜெய் பிரசாந்த் வெங்கட் முதலிடம்

September 28, 2025 தண்டோரா குழு

கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்தியாவின் சிறந்த இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்கள் என அனைவரையும் ஒரே இடத்திற்கு இந்த போட்டி கொண்டு வந்தது.மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை என பல்வேறு பிரிவு போட்டிகளில் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள கார் மற்றும் மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வமுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஜேகே டயர் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தப் போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.இந்த ஆண்டு ஜேகே டயரின் பந்தய நாட்காட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட லெவிடாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெய் பிரசாந்த் வெங்கட், மாருதி இக்னிஸ் மாடல் காரை தன்னால் தன்னம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை வெளிப்படுத்தினார்.

வார இறுதி மேகமூட்டம்,மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய சவாலானதாக இருந்தபோதிலும், திறமை மற்றும் தைரியத்திற்கான உண்மையான சோதனையாகயும் இது அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த போட்டியில், ஜெய் பிரசாந்த் 10 சுற்றுகளாக நடந்த 2.3 கிமீ தூரத்தை 14:38.492 நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.
சனிக்கிழமை போட்டியை கவனமாகத் தொடங்கிய ஜெய் பிரசாந்திற்கு கிடைத்த பொருத்தமான பரிசு இதுவாகும். அன்று, குருகிராமைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் நிஹால் சிங், வேகத்தாலும் உற்சாகத்தாலும் அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமை அவரது காரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் போட்டியில் சரியாக பங்கேற்க முடியாமல் போனது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலின் சிறப்பம்சமாக, நான்காவது பந்தயத்தில், ஜெய் பிரசாந்த்,விருந்தினர் ஓட்டுனராகப் போட்டியிடும் மீரா எர்டாவுடன் மோதினார். அனுபவம் வாய்ந்த தொழில்முறை நிபுணரான மீரா, நான்கு பந்தயங்களிலும் முதலிடம் பிடித்தார், இது அவரது போட்டி மனப்பான்மை வலுவாக உள்ளது என்பதற்கான சான்றாகும்.

“நான் சிறப்பாக காரை ஓட்டியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.இந்த கார் புதியதாக இருந்தாலும் அதில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன” என்று அவர் கூறினார். மீரா 15 ஆண்டுகளுக்கும் மேலாக கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற லெவிடாஸ் கோப்பை போட்டியானது, புதுமுகங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்றது. ஜெய் பிரசாந்த் இந்த போட்டியின் நான்காவது பந்தயத்தில் உச்சத்தை தொட்டார், 1:26.100 நேரத்தில் வெற்றிக் கோட்டைத் தொட்டார். இது குறித்து அவர் கூறுகையில் “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த ஞாயிற்றுக்கிழமை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாகும்” என்று தெரிவித்தார்.

இதேபோல் ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையில் நவநீத் குமார் மற்றும் அனிஷ் டி ஷெட்டி கடுமையாகப் போராடினர், மூன்றாவது பந்தயத்தின் இறுதி சுற்றில் அவர்களின் போட்டி உச்சத்தை எட்டியது. ஒரு வியத்தகு முடிவில், நவநீத் அனிஷை முந்தினார்.

இது குறித்து நவநீத் கூறுகையில்

“இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் இவ்வளவு நெருக்கமான பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி என்று ஒப்புக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை வார இறுதியில் மற்றொரு உற்சாகத்தை சேர்த்தது, வளர்ந்து வரும் பந்தய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் போட்டி அனுபவத்தைப் பெறவும் ஒரு முக்கியமான தளத்தை இது வழங்கியது. போட்டியிட்ட மூன்று பந்தயங்களில், எம்ஸ்போர்ட் புவன் போனு இரண்டு வெற்றிகளைப் பெற்றார் (பந்தயம் 1 – 16:06.951 மற்றும் பந்தயம் 3 – 16:26.624), அதே நேரத்தில் மொமெண்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸின் அபிஜித் வடவள்ளி ரேஸ் 2-ல் 14:23.860 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்த வெற்றியைப் பெற்றார். வினித் குமார் எம் மற்றும் லோகித்லிங்கேஷ் ரவி ஆகியோரும் போட்டியில் முக்கியமாக இடம் பிடித்தனர்.

அடுத்த தலைமுறை இந்திய பந்தய நட்சத்திரங்களை அடிமட்ட மட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதில் ஜேகே டயர் மோட்டார் ஸ்போர்ட்டின் அர்ப்பணிப்பை இந்த நோவிஸ் கோப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

மேலும் படிக்க