• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்

September 26, 2025 தண்டோரா குழு

கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரேத பரிசோதனைக்காக உடல் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க