• Download mobile app
28 Dec 2025, SundayEdition - 3609
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு – நடிகை ஹரிஜா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

September 25, 2025 தண்டோரா குழு

கோவை புரூக்ஃபீல்டு மாலில்நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் 866 வது புதியகிளையாக தொடங்கப்பட்டு உள்ளது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை ஹரிஜா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் கடையை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு நேச்சுரல் சலூன் நிறுவனர் குமாரவேல் தலைமை தாங்கினார்.விழாவில்
புரூக்ஃபீல்டு முதன்மை நிர்வாக அதிகாரி அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நேச்சுரல் சலூன் நிறுவனர் குமாரவேல் கூறியதாவது:

கோவை புரூக்ஃபீல்டு மாலில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை 866 ஆவது கிளையாகும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 80 கிளைகள் உள்ளன.நேச்சுரல் சலூன் வாடிக்கையாளர்களுக்கு தனது சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இதற்கு இங்கு பணியாற்றும் ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்ற உணர்வோடு பணிபுரிந்து வருவதன் காரணமாக நேச்சுரல் சலூன் சிறந்து விளங்குகிறது.

மேலும் விழாக்கால சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் கார்டு
கோல்டு கார்டு என இரண்டு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் நேச்சுரல் சலூன் அஸ்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க