• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ப்ரீட்லிங் புதிய கிளை திறப்பு

September 13, 2025 தண்டோரா குழு

பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் திறக்கப்பட்ட ஆறாவது கிளை என்பது பெருமைக்குரியது.

தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி பரப்பளவில், இந்த புதிய பொட்டிக் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த ஓர் அழகான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் முதன்முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக அணிந்து பார்த்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

ப்ரீட்லிங் கிளையின் மையப்பகுதியில், ‘ பி’ லோகோவுடன் கூடிய அழகிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து பிடித்தமான, பொருத்தமான வாட்ச் தேர்வு செய்வதற்கு ‘ப்ரீட்லிங் வாட்ச பார்’ என்ற அமைப்பும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய அலங்கார கட்டமைப்பு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என்பதில் ஐயம் இல்லை.

புதிய கிளை குறித்து ப்ரீட்லிங் இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் பானோத் கூறியதாவது:

இந்தியாவில் எங்கள் ரீடெய்ல் பங்குதாரர் ஆன, ஜிம்சன் உடன் இணைந்து புதிய கிளையை திறந்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்கள் நிறுவன விரிவாக்க திட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். தென்னிந்தியாவில் கிடைக்கும வரவேற்பு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களை பிரைட்லிங் உலகத்தின் அனுபவத்தை நேரடியாக உணர வரவேற்க காத்திருக்கின்றோம்.’’ என்றார்.

ஜிம்சன் கோவை இயக்குநர் நவாஸ் கூறியதாவது:

“ப்ரீட்லிங் நிறுவனத்துடன் எங்களது கூட்டுறவை வலுப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறோம். ஜிம்சன் நோக்கம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர உயர்த்தர வாட்ச் பிராண்டுகளை அவர்களின் கரங்களில் கொண்டு சேர்பதேயாகும். தென்னிந்தியாவில் உயர்தர வாட்ச்-களுக்கான ஆர்வம் அதிகம் காணப்படுகிறது. இந்த புதிய கிளை வாட்ச பிரியர்களுக்கு உயர்தர அனுபவத்தை அளிக்கும்.’’ என்றார்.

ப்ரீட்லிங்கின் தனித்துவமான கிளை வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள்

* எளிதாக அணுகும் தன்மை

* ஒருங்கிணைந்த அமைப்பு

* நவீன, பாரம்பரிய வடிவமைப்பு

* வீடு போன்ற உணர்வு

* Navitimer, Top Time, Premier, Avenger வாட்களின் தொகுப்புகள்

* பிரத்யேக வடிவமைப்பில் Superocean Heritage, Top Time Racing Collection தொகுப்புகள்

* புதிய வாட்ச் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

மேலும் படிக்க