September 4, 2025
தண்டோரா குழு
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் மாவட்டம் 250(S) சார்பில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன்250(S) பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.இந்த நிலையில், செப் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவைப்புதூர் குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன்250(S) ஆசிரியர் தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் மாவட்ட 250(S) தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மீனாட்சி வரவேற்பு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில்,பள்ளி ஆசிரியர்கள் 30 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அலையன்ஸ் பிரபாகரன்,
பள்ளியில் படித்து நாம் பல முன்னேற்றங்களை கண்டு எங்கு சென்றாலும் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கு வந்து நம்மை முன்னேற்றிய ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும். இந்தப் பள்ளிக்கு தேவையான பல்வேறு பணிகளை அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் சேரன் முன்னெடுத்து செய்யும் என்றார்.
மேலும், நிகழ்சியில், அலையன்ஸ் முரளி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், ஆசிரியர்கள் ராஜா முகமது, கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.