• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனித மூளைக்கும் கணினி மூளைக்கும் இடையேதான் வருங்காலத்தில் போட்டி இருக்கும் – நீயா நானா கோபிநாத் பேச்சு

August 29, 2025 தண்டோரா குழு

மனித மூளைக்கும் கணினி மூளைக்கும் இடையேதான் வருங்காலத்தில் போட்டி இருக்கும் என்று ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னது தற்போது உண்மையாகிவிட்டதாக, நீயா நானா புகழ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பார் கல்விக் குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரி மற்றும் ஆர்கிடெக்சர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு, குழுமத்தின் கருமத்தம்பட்டி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நீயா நானா கோபிநாத், கார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார், கல்லூரித் தலைவர் ரவி, மற்றும் பார்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்சியில்,பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு,தங்க நாணயம் பதித்த சான்றிதழ் பரிசாக வழங்கி வரவேற்கப்பட்டது.

டாக்டர் அனுஷா ரவி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அன்புடன் வரவேற்றார். மாணவர்கள் பார்க் குழுமத்தின் ஒரு அங்கமாக இருப்பதிலும்,அதன் வலுவான முன்னாள் மாணவர்கள் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதிலும் பெருமைப்படுவதாக அவர் பேசினார்.எங்கள் குழுவில் நம்பிக்கை வைத்த பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கோபிநாத், “மனித ஆற்றலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான போட்டி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அது தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) என்ற தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. மனிதர்களால் கொடுக்க முடியாத தகவல்களையும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பெற முடியும்,” என்றார்.

மேலும் அவர், “இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதைக் கேட்காமல், மாணவர்கள் தாங்களாகவே சிந்தித்து செயல்பட வேண்டும். உலகின் முன்னணி நிறுவனங்களில் தமிழர்களே முன்னிலையில் உள்ளனர்.

உங்களின் ஒரு நாளை எப்படி திட்டமிட்டு செலவழிப்பது என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் பிற ஆதிக்க சக்திகள் தீர்மானிக்க விடாதீர்கள். நமது இலக்குகளை அடைய நமது வாழ்க்கையில் தேவைப்படும் ஒழுக்கம் பற்றியும் அவர் பேசினார். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு சரியான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க