• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்களுக்கென பிரத்யேக ஸ்மார்ட்போன் அறிமுகம்

August 26, 2025 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் கோவை மாநகர பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் காவலர்களுக்கு செல்போன்கள் மற்றும் பிரதியாக தொலைபேசி எண்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சரவண சுந்தர் “ஓன்று” என்ற திட்டம் மூலம் காவலர்களுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.இந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 19 பீட்டுகள் இணைக்கப்பெற்று மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரத்தியேக தொலைபேசி எண்ணும் ஸ்மார்ட்போனும் வழங்கப்பட்டுள்ளது.
அவசர நேரங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் அங்கிருந்து உடனடியாக அது எந்த பகுதியில் வருகின்றது என்பதை சரி பார்த்த உடனடியாக அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அல்லது சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பு மாற்றப்படும்.

அதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதனை செய்து கொடுப்பார்கள் இதற்காக பிரத்தியாக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள ரோந்து பீட் பார்க்கும் காவலர்களின் எண்களை அறிந்து வைத்துக் கொள்ளலாம்.

மேலும் நாங்களும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம் இதனால் பொதுமக்கள் உடனடியாக காவலர்களை அணுகலாம் என்றார்.மேலும் கோவை மாநகர பகுதிகளில் வருடத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் வாகனங்கள் வருகின்றன. இதனால் போக்குவரத்தில் நெரிசல் என்பது அதிகரித்து தான் வருகிறது இருந்த போதும் எங்களால் முடிந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவு பெற்றால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்.

அதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக பல்வேறு பணிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.விநாயகர் சதுர்த்தியை பொருத்தவரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குனியமுத்தூர் இல் ரூட் மார்ச் செய்திருந்தோம் மேலும் தற்பொழுது பிரச்சனைக்குரிய இடங்கள் அதேபோல வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்த என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக கடந்த காலங்களை பொறுத்தவரை விநாயக சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அதிவிரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போன்ற படைகள் வரும் அதேபோல இந்த ஆண்டும் அதிவிரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நான்கு பட்டாலயங்கள் வரவுள்ளது கடந்த ஆண்டு 700 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் அதே அளவிற்கு அனுமதி அளிக்கப்படும் இருந்த போதும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் மொத்தம் மாநகரை பொறுத்தவரை 1800 காவலர்கள் விநாயகர் சதுர்த்திக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரப் பகுதிகளில் 2000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இதனை இணைக்க உள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இதுபோன்று ரோந்து காவலர்களுக்கு செல்போன்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை சுழற்சி முறையில் தான் பணியாற்றுகின்றனர். மேலும் வயதானவர்களுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல சுழற்சி முறையில் பணியாரம் பட்சத்தில் வேலைப்பளு என்பது இருக்காது என்றார்.

மேலும் படிக்க