• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் ‘ரிஹ்லதுர் ருஷ்த்’ ஞானப் பயணம் என்னும் தலைப்பில் இஸ்லாமிய கண்காட்சி..‌.!

August 25, 2025 தண்டோரா குழு

இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் (G I O) சார்பில் கோவை கரும்புக்கடை ஹிதாயா மகளிர் கல்லூரியில் இரண்டுநாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சியில் முகமது நபிகளார் அவர்களது மக்கா வாழ்க்கையுடன் அன்றைய கஃபாவின் புகைப்படத்தின் அறிமுகத்தோடு தொடங்கி நபிகளார் பயணித்த தாயிப் தௌர் குகை, ஹிஜ்ரத், மதினா வாழ்க்கை, பத்ர் யுத்தம் முதல்,அரஃபா மைதானம் வரை எளிமையாக புரியும் வகையில் காட்சி அமைப்புகளோடு சிறப்பாக மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும்,திருமறை கூறும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய அற்புதமான விஞ்ஞானச் செய்திகள், நூஹ் நபி, யூனுஸ் நபி, இப்ராஹிம் நபி, யூசுப் நபி போன்ற இறைத்தூதர்களின் வரலாறுகளை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய உலகில் பெரும் இழப்பை சந்தித்து வரும் பாலஸ்தீன மக்கள் படும் துயரின் காட்சிகள்,பிறந்த குழந்தை தொட்டிலை அடையுமுன்னரே
மரணத்தைத் தழுவிய காட்சிகள்,
பள்ளிக்குழந்தைகள் உயிரிந்த சோகங்கள், பட்டினி மரணங்கள் போன்றவை மாணவிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இன்றைய சமூகம் இணைய தளங்களின் பிடியில் சிக்கி சீரழிவதை தத்ரூபமாக விளக்கும் காட்சிகள், வரதட்சணைக் கொடுமைகளால் பெண்களின் சீரழியும் வாழ்வு ஆகியவற்றையும், இன்றைய சமூகம் கல்வியில் சிறப்புற்று விளங்க அழகிய வழிகாட்டல் பட்டியலையும், கப்பல், விமானம், அறிவியல் தொழில் நுட்பம் நவீன கல்விகளை சிறப்பாக அறிமுகப்படுத்தினர்.

பெண்கள் கூட்டு முயற்சியால்
பல நல்ல செயல்களை சாதிக்க முடியும் என்பதற்கான நேரடி சான்றாக இஸ்லாமிய மாணிவியர் அமைப்பினரின் இக்கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

இதனை,தமிழ் மாநில G I O அமைப்புத் தலைவி சகோதரி ஆயிஷா இஸ்மாயில், கோவை மாவட்ட G l O தலைவி ருக்கையா தஸ்னிம் மற்றும் G I O அமைப்பு மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.

மேலும் படிக்க