August 21, 2025
தண்டோரா குழு
கோவையில் உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் டாடாபாத் பகுதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.
பேக்கரியில் தயாரித்து விற்பனைச் செய்யப்படும் உணவு பொருட்கள் தயாரிப்பது,விநியோகிப்பது,கழிவுகளை சுத்தமாக அப்புறபடுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ல் உள்ள விதிகள் மற்றும் அதனை பின்பற்றுவது குறித்து நடைபெற்ற இதில்,கோவையில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அரோமா ஆர்.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலாளர் பாலன் ,பொருளாளர் அவிநாசியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை மருத்துவர் டி.அனுராதா கலந்து கொண்டு, பேக்கரியில் தயாரித்து விற்பனைச் செய்யப்படும் உணவு பொருட்களை பாதுகாப்பாக தயாரிப்பது, விநியோகிப்பது, கழிவுகளை சுத்தமாக அப்புறபடுத்துவது, உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ல் உள்ள விதிகள் மற்றும் அதனை பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
அதே போல பேக்கரி உரிமையாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்கவேல், முருகேசன், மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராகம் பேக்கரி செல்வராஜ்,காரமல் பேக்கரி கார்த்திகேயன்,
விக்னேஷ் பேக்கரி நாகராஜ், பிரசன்ன லட்சுமி ரங்கசாமி,ஃபுட் கார்டன் செந்தில்,மற்றும் விஜயலட்சுமி விஜயவேலு (அரோமா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி),செந்தில் நடராஜன், மற்றும் ஜெயகுமார்,அனீஷ்,சக்திவேல்,சுஜித் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.