• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இன் 4-ம் ஆண்டு விளையாட்டு தினம்

August 18, 2025 தண்டோரா குழு

பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ – ன் 4-ம் ஆண்டு விளையாட்டு தினமும் 79 ஆவது சுதந்திர தினமும் மிக கோலாகலமாகவும் தேசப்பற்றுடனும் இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக எம். ஞான பண்டிதன் முதல்வர் அகரம் பப்ளிக் பள்ளி மற்றும் பெர்க்ஸ் பள்ளி தாளாளர் டாக்டர் உஷா இளங்கோ,செயலாளர் ஹரிராம், தலைமை ஆசிரியை ரீனா கிறிஸ்டி, துணை தலைமை ஆசிரியை,மீனாட்சி அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டமிரா மழலையர்களுடன் வகுப்பு 1 மற்றும் 2 மாணவர்களின் நடனம்,யோகா மற்றும் டம்பல்ஸ் ஆகிய நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வாக 15 ஆகஸ்ட் 2025 அன்று சிறப்பு விருந்தினராக பி. வெங்கடரமணா, ஸ்டர்டஜி அட்வைசர் ராம்ராஜ் காட்டன் அவர்களும் பள்ளி தாளாளர் டாக்டர் உஷா இளங்கோ, தலைமை ஆசிரியை ரீனா கிறிஸ்டி, துணை தலைமை ஆசிரியை மீனாட்சி அவர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டு தினமானது பலூன்களை பறக்கவிட்டு துவங்கினர்.இதில் வகுப்பு 3 முதல் 10 -ம் வகுப்பு மாணவர்கள் வரவேற்பு நடனம், மார்ச் பாஸ்ட், யோகா, கராத்தே, ஆர்ச்சரி, ஸ்கேட்டிங் ,சிலம்பம் மற்றும் ரிலே என மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இறுதியாக பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் மூவண்ண தேசியக் கொடியை அழகுற சீரமைத்தனர்.

இறுதியில் பள்ளியின் அனைத்து மாணவ மாணவியர் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடலுடன் விழாவானது இனிதே நிறைவுற்றது.

மேலும் படிக்க