• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தய போட்டி !

August 17, 2025 தண்டோரா குழு

ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் கார்ப்பந்தயம் கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியன் ரேஸிங் முதல் சுற்றின் முடிவில், கோவா ஏசஸ் – அணியின் ரவுல் ஹைமன்,பெங்களூரு கிச்சாஸ் – கிங்ஸ் அணியின் கைல் குமரன்,சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின்,அகில் அலிபாய் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

லேசான காற்றுடன் சாரல் மழை இருந்தபோதும்,பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் காரை சீறி பாய விட்டனர்.ரேஸ் துவங்குவதற்கு முன்பாக கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே மைதானத்திற்கு சர்ப்ரைஸ் விசிட்டாக பிரபல நடிகர் நாகசைதன்யா வந்தார்.

அவரை கண்ட கார் பந்தய வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் அவருடன் செல்பி எடுக்க குவிந்தனர்.தொடர்ந்து அவர் ஸ்பீடு வே பார்வையாளர் அரங்கில் அமர்ந்து ரேசை கண்டு ரசித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் கோவா ஏசஸ் ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.கிங்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தையும், சென்னை டர்போ ரைடர்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தன.

லேசான மழையுடன் ஈரமான பந்தய டிராக்கில் சீறிப்பாய்ந்த பார்முலா கார் பந்தயத்தை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்க