• Download mobile app
11 Aug 2025, MondayEdition - 3470
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் நடைபெற்ற பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

August 10, 2025 தண்டோரா குழு

கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், கோயம்புத்தூர் பாரா டேபிள் டென்னிஸ் குழு, தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டி 2025 கோயம்புத்தூரில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடத்தியது.

இந்த முக்கியமான நிகழ்வில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும், காயத்தின் வகை அடிப்படையில் வகுப்பு 1 முதல் 10 வரை போட்டியிட்டனர்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்தவும் மனவலிமையினை மேம்படுத்தவும், மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதையே குறிக்கோளாக கொண்டது.காலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுடன் தொடங்கியது.

இதையடுத்து சர்வதேச தரத்திலான புதிய டேபிள் டென்னிஸ் மேசை திறக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் என பல்வேறு சுற்றுகள் நடத்தப்பட்டன.பின்னர் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் A. சரவண சுந்தர் .,ஐ.பி.எஸ், பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி விளையாட்டாளர்களின் உறுதி மற்றும் ஊக்கத்தை பாராட்டும் எழுச்சியான உரையை நிகழ்த்தினார்.

நாள் முழுவதும் பரபரப்பாக நடந்த போட்டிகளில் கடும் போட்டி தன்மை, உற்சாகமான செயல்பாடுகள், மற்றும் சிறந்த விளையாட்டு மனப்பான்மை வெளிப்பட்டது.
கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் இஞ்சூரி பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ்.ராஜசேகரன்
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதில் கங்காவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.

பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டிய ஒரே ஒரு முதுகுத்தண்டு காயம் உள்ள நபரின் மூலம் தொடங்கிய கங்கா பாரா ஸ்போர்ட்ஸ் பயணத்தை பகிர்ந்தார்.ஒரு டேபிள் டென்னிஸ் மேசையில் இருந்து தொடங்கிய இந்த முயற்சி இப்போது 20 பாரா டேபிள் டென்னிஸ் வீரர்கள் , வீல் சேர் ரேசிங், பீல்ட் அத்தலடிக்ஸ், வீல் சேர் பாஸ்கெட் பால் போன்ற பிரிவுகளில் 50க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டமாக வளர்ந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம் இந்த விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சி, உடற்பயிற்சி ,ஊட்டச்சத்து மற்றும் நிதி ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது .

இதன் மூலம் பலர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்து தற்பொழுது காமன்வெல்த் போட்டிகளுக்கும் தேர்வாகியுள்ளனர்.இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது பாரா விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளையாட்டு வீரர்களின் திறமையையும் ,மனவலிமையும் மேம்படுத்துவதையும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கான ஆதரவை நிலை நாட்டுவதில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க