July 22, 2025
தண்டோரா குழு
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்கள் வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ எனும் ஒரு நாள் தியான நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவையில் நடைபெறும் அதே வேளையில், தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாகவும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சத்குரு வழிநடத்தும் சக்திமிக்க தியான அமர்வுகள், இசை நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள் ஆகியன இடம்பெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஈஷா யோக வகுப்புகளில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி அல்லது 13-நாள் யோக நிகழ்ச்சியில் சூன்ய தியான பயிற்சி பெற்றவர்கள் பங்கு பெறலாம். மேலும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி பெற்றவர்களில் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
குருவின் மடியில் நிகழ்ச்சி குறித்து சத்குரு பேசியுள்ள காணொளியில், “நாம் சிறுகுழந்தையாக தாயின் மடியில் இருந்த போது நமக்கு உயிர், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் கிடைத்தது. அதே போன்று உள்நிலை வளர்ச்சிக்கு இந்த குருவின் மடியில் நிகழ்ச்சி.” எனக் கூறியுள்ளார்.
கோவை ஈஷாவில் நடைபெறும் குருவின் மடியில் நிகழ்ச்சியில் நேரில் வந்து பங்குபெற இயலாதவர்களின் வசதிக்காக தமிழகத்தில் மட்டும் 112 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. அதே போன்று தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் நாட்டின் பிற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் உள்ளிட்ட நாடுகளிலும் குருவின் மடியில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன், பெர்த், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் நேரலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் நேரடியாகவும், நேரலை செய்யப்பட உள்ள பிற இடங்களிலும் பங்கேற்பதற்காக இதுவரை 22,000-க்கும் அதிகமான மக்கள் முன் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன் பதிவு அவசியம். பங்கு பெற விரும்புவோர் sadhguru.co/guruvinmadiyil என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 83000 99555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சத்குரு வழிநடத்தும் தியான நிகழ்ச்சிகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து, பல்வேறு மொழிகளை பேசும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அந்நிகழ்ச்சிகளை பெரும்பாலும் சத்குரு ஆங்கில மொழியில் வழிநடத்துவார்கள். ஆகையால் ஈஷாவில் குரு பௌர்ணமியை ஒட்டி தமிழ் மக்களுக்கு என்றே பிரத்யேகமாக சத்குரு முழுமையாக தமிழிலேயே வழிநடத்தும் குருவின் மடியில் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.