• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்

July 21, 2025 தண்டோரா குழு

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி புளோ, அதன் 2025 – 26-ம் ஆண்டிற்கான 2வது தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தை “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் இன்று கோவை ரெசிடென்சி டவர்ஸில் நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு கோவை அமைப்பின் தலைவர் டாக்டர் அபர்ணா சுங்; தலைமை வகித்தார். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து புளோ அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தேசியத் தலைவர் பூனம் சர்மா, பிரசிடியம் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதிலுள்ள அத்தியாயத் தலைவர்கள் பங்கேற்றனர். தலைமை, சமூகம் மற்றும் கலாச்சார வளங்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இக்கூட்டத்தை முன்னாள் தலைவர்கள் சுகுணா ரவிச்சந்திரன் மற்றும் பூனம் பாஃப்னா ஒருங்கிணைத்தனர். பல்வேறு சமூக நலப் பணிகள், தலைமைத்திறன் மேம்பாட்டு முயற்சிகள், மற்றும் பெண்கள் திறன்திறன் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பிக்கி புளோ அமைப்பின் தேசிய தலைவர் பூனம் சர்மா கூறியதாவது:-

பிக்கி புளோ என்பது இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பாகும். இது நாடு முழுவதிலும் உள்ள 22 அத்தியாயங்களில் 14,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவ வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சமூக அதிகாரமளிப்பு ஆகியவற்றில் புளோ முக்கிய பங்காற்றி வருகிறது.

புளோ கோவை, சமூக மாற்றத்திற்கான வழிகாட்டி அத்தியாயமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு தளங்களிலும் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு ஆதரவளிக்கிறது.

வணக்கம் கோவை என்பது வெறும் நிர்வாகக் கூட்டம் மட்டும் அல்ல இது தலைமைத்துவத்தின், சமூகத்தின், கலாச்சார பெருமையின் மற்றும் கூட்டு நோக்கங்களின் நிகழ்வு ஆகும்.

புளோ என்பது ஒரு அமைப்பைத் தாண்டி ஒரு இயக்கம். பெண்கள் தலைமை, தொழில்முனைவோர், எம்எஸ்எம்இ-கள் மற்றும் சமூக நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இது செயல்படுகிறது. பெண்கள் அதிகாரமளித்தல் என்பது வளர்ச்சி கதையின் பாதை. என்றார்.

கோவை அமைப்பின் தலைவர் டாக்டர் அபர்ணா சுங் பேசும் போது :- பிக்கி புளோவின் சிறப்பான திட்டங்கள் : மனநல முதலுதவி சான்றிதழ் திட்டம்: முன்னாள் தலைவர் ஸ்வாதி ரோஹித் தலைமையில் மனநல முதலுதவி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனைகட்டி கிராமப்புற வாழ்வாதார திட்டம் : முகுல் மாதவ் அறக்கட்டளையுடன் இணைந்து, பழங்குடி குடும்பங்களுக்கு ஆடு வளர்ப்பு மற்றும் மண்புழு உர உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.
மிதிவண்டி விநியோக இயக்கம் : ஏழைப் பெண்களுக்கு கல்விக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்-அப் பிட்ச் போட்டி : டை நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்ட் அப்புகளை மேம்படுத்தும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏன்றார்.

வணக்கம் கோவை நிகழ்வின் ஒரு பகுதியாக ஆன்மீகம் மற்றும் கலாச்சார பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்த மதுரை மற்றும் ராமேஸ்வரம் கோயில்களுக்கான சுற்றுப் பயணம் நாளை (22.07.2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக காமெடி நிகழ்ச்சி, வணக்கம் கோவை பஜார் ஆகியவையும் நடைபெற்றன.

மேலும் படிக்க