• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்

July 21, 2025 தண்டோரா குழு

பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் சார்பில் 2025-ஆம் ஆண்டில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடத் திட்டமிட்டப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழா இன்று (20/07/2025), தொண்டாமுத்தூர் ராஜலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மரம் சார்ந்த விவசாய முறையை முன்னெடுப்பதன் மூலம், தொண்டாமுத்தூர் பகுதியில் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்குதல், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு புத்துயிர் அளித்தல் ஆகிய உயர்வான நோக்கங்களுடன் ‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ தொடங்கப்பட்டது.

இதன்படி காவேரி கூக்குரல் இயக்கத்துடன், தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், கோவை கட்டிட கலைஞர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் – கோவை மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றன.

இவ்வியக்கம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தாண்டு பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் விவசாயிகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான டிம்பர் மரக் கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம், ரோட்டரி சங்கம் – டி’எலைட், நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைத்து இதனை செயல்படுத்த உள்ளன.

பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, மஹோகனி, வேம்பு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ரோட்டரி சங்க தலைவர்கள் – பிரதிநிதிகள், நொய்யல் ஆறு அறக்கட்டளை செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க