• Download mobile app
31 Dec 2025, WednesdayEdition - 3612
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்

July 16, 2025 தண்டோரா குழு

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்கமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92)
பத்திரபதிவு எழுத்தராக இருந்துள்ளார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள்,ஒரு மகன் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதில் ஒரு மகள் குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவில் பிரிவில் வசந்து வருகிறார்.

ராகிருஷ்ணன் – சரோஜா இருவரும் அவர்கள் வீட்டில் மகளுடன் இருந்து உள்ளனர்.வயது மூப்பின் காரணமாக ராதாகிருஷ்ணன் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப் பட்ட நிலையில் உயிர் இழந்தார்.
குடும்பத்தினர் சோகமாக இருந்த நிலையில், கணவணின் உடல் அருகே அழுதபடி உட்கார்ந்திருந்த சரோஜா துக்கம் தாங்காமல் திடீரென மயங்கி கணவரின் உடல் அருகே சாய்ந்து உள்ளார்.

குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்க்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.இதை தொடர்ந்து மின்மயானத்தில் இருவர் உடலும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன் – சரோஜா தம்பதிகள் எப்போதும் எங்கு சென்றாலும் ஒன்றாகத் தான் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

இருவரும் பிரியாமல் ஒன்றாகவே இருந்தவர்கள்,இறப்பிலும் பிரியாமல் உயிர்விட்ட சம்பவம் குடும்பம் மற்றும் உறவினர்கள் இடையே
சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க