July 12, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னனி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை அதி நவீன சொகுசு வசதிகளுடன் கோவையில் துவங்கியது.
தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலாவது இடத்தில் உள்ளது.பல முன்னனி நிறுவனங்கள் கோவையில் தங்களது வர்த்தக நிறுவனங்களை துவக்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் முன்னனி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஓட்டலை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.நட்சத்திர அம்சங்களுடன்,சுமார் சுமார்142 ஆடம்பர அறைகளுடன், அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது.
மெர்லிஸ் ஓட்டல் குறித்து நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சந்தீப் தேவராஜ், இயக்குனர் திவ்யா,பொது மேலாளர் மது சூதனன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய அவர்கள்,கோவையின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில், விமான நிலையத்திற்கு அருகில்,மெர்லிஸ் ஓட்டல் அமைந்துள்ளதாகவும்,பல்வேறு அதி நவீன சொகுசு வசதிகளுடன் எங்கள் விருந்தினர்களுக்காக கோவையில் மெர்லிஸ் ஓட்டலை திறப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தனர்.
மெர்லிஸ் வரும்,விருந்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன், கூடிய அறைகள், விசாலமான பிரத்யேக சூட் அறைகள்,சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அறைகளிலும், தனிப்பட்ட பணிகளுக்கென பிரத்யேக பர்னிச்சர் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
மெர்லிஸ் ஓட்டல்ஸ் ஆடம்பரத்தின் அடையாளமாக கோவைக்கு வரும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர்,ஒரே நேரத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கென கீழ் மற்றும் தரைத்தளங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக குடும்ப விழாக்கள் மற்றும் நிறுவனங்களின் பெரிய மற்றும் சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக 50 லிருந்து 1,600 பேர் அமரக்கூடிய வகையில் பத்து வகையான ஹால்கள் இருப்பதாகவும்,உயர் தர வசதிகளுடன் கூடிய பஃபே உணவகம் ஆலக்காட் ,என ஐந்து வகையான உணவகங்களில் உலகளாவிய பல்வேறு வகையான சிக்னேச்சர் சிறப்புகளுடன் உணவுகள் பரிமாறப்படும் என தெரிவித்தார்.
மேலும் உயர்ந்த தரத்திலான மது கூடம்,நவீன வசதிகளை கொண்ட உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், கருத்தரங்க கூடம் போன்ற வசதிகளும் இருப்பதாக கூறிய அவர்,கோவை மற்றும் கோவைக்கு வரும் விருந்தினர்களை வரவேற்க மெர்லிஸ் தயாராக இருப்பதாக கூறினார்.