July 10, 2025
தண்டோரா குழு
மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ரிவர், ஈரோட்டில் தனது புதிய கடையைத் தொடங்கியுள்ளது.
பெருந்துறை சாலையில் 1050 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரிவர் ஸ்டோர், ஸ்ரீ சாய் ஆட்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஸ்டோர், இண்டீ ஸ்கூட்டர்கள், ஆக்செஸ்சரீஸ் மற்றும் அதைச்சார்ந்த வணிகப் பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிட வாய்ப்பளிக்கிறது.
“ரிவர் ஸ்டோர் பெருந்துறை சாலை”, ஒரு துடிப்பான சூழலைக் கொண்டுள்ளது மற்றும் நதிகளின் சாரத்தைத் தூண்டும் பிராண்டின் அழகியலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அன்றாட வாழ்க்கையில் இண்டீ எவ்வாறு கலக்கிறது என்பதை சித்தரிக்கிறது. மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் இச்சித்தரிப்புகள் ரிவர்-ன் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகின்றன.
ரிவர் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், நாகர்கோவில், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ஏழு கடைகளை இயக்குகிறது. ஈரோட்டைத் தொடர்ந்து, சேலம், மதுரை மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் புதிய கடைகளை திறந்து மாநிலத்தில் மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் வணிகத்தை எடுத்துச் செல்ல, இந்தியா முழுவதும் தனது தேசிய விரிவாக்கத்தை ரிவர் தற்போது துரிதப்படுத்தி வருகிறது.
இண்டீயின் விலை 1,42,999 ரூபாயாக நிற்ணயி்கப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம், ஈரோடு). வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று டெஸ்ட் ட்ரைவ் செய்யலாம், வணிகப் பொருட்களை உலாவலாம் அல்லது புதிய இண்டீ-யை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ட்ரைவ்-க்கு முன்பதிவு செய்யவும், ஒரு புதிய இண்டீ-யை வாங்கவும் www.rideriver.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
“தி ரிவர் ஸ்டோர் பெருந்துறை சாலை”, எண் 314/2A2, சின்னக்காடு தோட்டம், வீரப்பம்பாளையம் பிரிவு, பண்ணை நகர், TPN மருத்துவமனை அருகில், பெருந்துறை சாலை, ஈரோடு-638012 இல் அமைந்துள்ளது.